


.jpg)
.jpg)
[தமிழ் உலகம்] ♥ முள்ளு கம்மி சொன்ன கதை-படங்கள் ♥
உலகத் தமிழர்களின் ஓயாத போர்க்குரலால்,இன்று உலகத்தின் முன்னால், ராஜபக்சே போர்க் குற்றவாளியாக்கி நிறுத்தப்பட்டிருக்கிறான்.
அவனுக்கு இப்போது சாவு பயம் வந்து விட்டது...!
தமிழீழத்தில் நம் சொந்தங்களைக் கொல்லும் ராஜபக்சே,
நம் மனசைக் கொல்ல, நம் மன பலத்தைக் குறைக்க, நமக்குள் இப்போழுது எரியும் ஈழத் தீயை அணைக்க, நம் தலைவன் பிரபாகரன் இறந்து விட்டதாக, தினம் தினம் பொய்க் கதைகளை,கட்டுக்கதைகளை,வதந்திகளை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறான்.
அந்த சதிச் சகதிக்குள் நீங்களும் சிக்கிக் கொள்ளாதீர்கள்!
இரத்தத்தால் சிவந்த நம் தமிழீழம் விடிய...
ஒவ்வொரு தமிழனும், ஒரு தீக்குச்சியாக இருப்போம்!
-------------------------------------------
♥ பிணந்தின்னிப் பேய்கள் தமிழக காவல்துறை-ஈழ அகதிகள் வேதனை ♥
பிணந்தின்னிப் பேய்கள் போன்று செயற்படும் தமிழக காவற்துறையினர் - ஈழ அகதிகள் வேதனை
ஈழத்தில் இருந்து கப்பல்மூலமாகம், விமானம் மூலமாகவும் சென்று தமிழகத்தில் முகாம்களிலும், வெளியிலும் தங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழக காவற்துறையினர் பல்வேறு வகையில் பெரும் அசௌகரியத்திற்கும், அவமானத்திற்கும் உள்ளாக்குவதாக பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இவர்கள் யாவரும், விஸா பெற்றுவந்தவர்கள் கூட காவற்துறை நிலையங்களில் தமது பதிவை உறுதிப்படுத்தவேண்டும் எனத் தெரிவிக்கும் காவற்றையினர் இந்த பதிவுகளை மேற்கொள்ள சர்வ சாதாரணமாகவே இவர்களிடம் 1000, ரூபா 1500 ரூபா என
வெளிப்படையாக கேட்டு நச்சரித்தும், தமக்கு இன்ன பொருட்கள் வேண்டும் வாங்கித் கொடுத்தாலத்தான் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுவோம், இல்லை என்றால் விடுதலைபபுலிகள் என்று பொய்க்குற்றச்சாட்டில் உள்ளே தள்ளிவிடுவோம் என அச்சுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற ஒரு நிர்வாக சேவை பணிப்பாளர் ஒருவர், தாம் விசாவுடன் ஒரு திருமணம் நிமித்தம் இரண்டு மாதங்கள் சென்னையில் தங்கியிருக்க உத்தேசித்ததாகவும், அப்போது காவற்துறை பதிவு முக்கியம் என அறிவுறுத்தப்படவே தாம் அங்கு சென்றதாகவும், தன் வயது, தன் பதவி என எதையும் கருத்தில் கொள்ளாமல், தன்னிடம் 1000 ரூபா பணமாக தருமாறும்,
இல்லையெனறால் பதிய முடியாது எனத் தெரிவித்தாகவும், அதேபோல தான் அங்கே இருந்தபோது ஈழத்தமிழர்கள் பலரிடமும் இப்படி மேற்படி காவற்துறையினர் சர்வ சாதாரணமாக காசு கறந்துகொண்டிருந்ததை கண்ணுற்றதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஈழத்தில் தமது உறவக்களை உடல் சிதற இழந்து, பல்வேறு கஸ்டங்களைக் கடந்து தமிழகம் வரும் அவர்களை அதே இனத்தினராக இருந்தம் இந்த இதயமில்லாத அரக்க பிணந்தின்னிகள் போன்ற தமிழக காவற்துறையினரின் செயல்கள் உடனடியாக கண்டிக்கப்படக்கூடியதாகவும், ஊடகங்கள் இதை வெளிக்கொண்டுவரவேண்டும் எனவும் கேடடுக்கொண்டார்.
"சிங்களவனுககு பயந்த இஙகேவந்தால் இவங்களைவிட சிங்களவன்கள் கையால செத்தாலும் பறவாய் இல்லை நான் நாட்டுககுப்போகப்போறேன்" என காவற்துறை நிலையத்தில் தம்மை சந்தித்த பெரியவர் ஒருவர் கவலையுடன் சொன்னதாகவும் அவர் குறிப்பட்டள்ளார்.
http://www.nerudal.com/nerudal.7013.html
-------------------------------------------------------
♥ சிங்கள அரசு மீது யுத்தக்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என வேண்டுகோள் ♥
சுதந்திரமான யுத்தக்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என நவனீதம் பிள்ளை வேண்டுகோள்
வீடியோ படம்,
http://www.youtube.com/watch?v=4ISRPAqgV5E
-------------------------------------------------------
நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டப்பட்ட 11வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் விஷேட கூட்டத்தில், இது தொடர்பாக கருத்துரைத்த அவர், சுயாதீனமானதும், பக்கசார்பற்றதுமான யுத்தக் குற்ற விசாரணைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், யுத்த சமயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை சுட்டுக்கொண்டது பெரும் யுத்தக்குற்றமாகுமென கூறியுள்ளார். இது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். அவர் ஆற்றிய உரை காணொளியில் காணலாம். இன்று 27.05.2009 அடுத்த கட்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திலும் இலங்கை நிலை குறித்து விவாதம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243386947&archive=&start_from=&ucat=4&
-----------------------------------------
♥ 30,000 ஈழத் தமிழர்கள் ஊனம் ♥
30,000 தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் ஊனமுற்றுள்ளனர்
இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் சுமார் 30,000 தமிழர்கள் ஊனமுற்றிருப்பதாக பிரித்தானிய இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வெளிவரும் டெலிகிராப் பத்திரிகையின் இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த இரு மாதத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கானவர்கள் முழு அங்கவீனம் அல்லது பாதி அங்கவீனப்பட்டு இருப்பதாகவும், பலர் கை, கால்கள் மற்றும் விரல்கள் என பல உறுப்புக்களை இழந்த நிலையில் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இராணுவத்தின் பிடியில் தற்போது இருக்கும் 2 லட்சத்தி 80 தாயிரம் மக்களில் 10 இல் ஒருவர் அங்கவீனமாக இருப்பதாக சமீபத்தில் தடுப்புமுகாமிற்குச் சென்ற வெளிநாட்டுத் தொன்டு நிறுவனப் பணிப்பாளர் தெரிவிக்கிறார்.
பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச அங்கவீனமுற்றோர் அமைப்பானது, (http://www.handicap-international.org.uk/) சிறிய தொழிற்ச் சாலைகளை திருகோணமலையில் நிறுவி, உள்ளூர் மக்கள் உதவியுடன் அங்கவீனமுற்றவர்களுக்கு செயற்கை அங்கங்களை பொருத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கு இருக்கும் அனாதைக் குழந்தைகள் பற்றி ஏற்கனவே அதிர்வு இணையம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243390048&archive=&start_from=&ucat=2&
வீடியோ படம்
http://www.youtube.com/watch?v=d8kXCDiW98o
♥ முள்ளு கம்மி சொன்ன கதை-படங்கள் ♥
ஓடும்நதி........!
www.odumnathi.blogspot.com
No comments:
Post a Comment