WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, June 30, 2009

உறங்காத கண்மணிகள்....!!! உருக்கமான கட்டுரை,,,!!!

Re: சுட்டு சாவது உண்டு"-‏
Fra: Pugazhendhi Murugaiyan (murugaiyanseychelles@gmail.com)
Sendt: 30. juni 2009 12:21:10
Til: V Sivasupramaniam (vijaratnamsiva@hotmail.com)
Kopi: raja gsp (raja_gsp@yahoo.co.in); velumani master (velumani007@yahoo.com); sahabdeen enchellam (enchellam2000@yahoo.com); singaramponselvan@hotmail.com; vamadevan n.sabaratnam (sabvama@hotmail.com); thambibuva@hotmail.com; shanmugappirabunalliah@hotmail.com

Really touching, the dedication of the Tamils and the spirit of theTamil fighters are unequivocal in their strength and capacity, Isalute the hands let off from the bush, I wish their direction andforwardness would have let them to an equal and respectful place inthe society. we all know what was the end result of it, I wish,We/You all may wish to know what went wrong in achieving thesetargets.thanks for reading and permitting to commentPugal.2009/6/29 V Sivasupramaniam :>>>> please read>>

URANGAATHA KANMANIKAZH>>>>>>> ஓடும்நதி........!>> www.odumnathi.blogspot.com>> "ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை">>>>> போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால்> பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது.>> ♥ "விடுதலைப் புலிகள் கடும் பயிற்சியின் போது நிஜமாகவே சுட்டு சாவது> உண்டு"-நக்கீரன் கட்டுரை ♥>> உறங்காத கண்மணிகள் உருக்கமான கட்டுரை>>>>>>>> உறங்காத கண்மணி களை அறிவீர்களா? இவர் களின்றி 2000-ம்ஆண்டுவரை தமிழீழ விடுதலைப்> போ ராட்டம் சாதித்த மிகப்பெரும் ராணுவவெற்றிகள் ஒன்றுகூட சாத்தியப்> பட்டிருக்காது.>> விடுதலைப்புலிகளின் முன்னணிராணுவ புலனாய்வுப் பிரிவின் பிள்ளைகளுக்குப்> பெயர்தான் "உறங்காதகண்மணிகள்'. நிலவு காயும் நாட்கள்தான் இவர்களது தீபாவளி.> கனத்த இரவுகளில்> இவர்களுக்கு மட்டும் நூறு கண்கள் திறக்கும். காற்றோடு காற்றாய்ப் போவார்கள்.> கணப்பொழுதில் வெட்டி மறையும் மழை மின்னல்போல் எதிரியின் தளங்களை ஊடுருவி> உட்புகுவார்கள்.>> புலிகள் படைத்த ராணுவ வெற்றிகளுக் கெல்லாம் முக்கிய காரணம் அவர்களது> துல்லியமான திட்டமிடல். பிசிரற்ற திட்டமிடலுக்கு ஆதாரத் துணையாய் இருப்பது> "உறங்காத கண்மணிகள்' கொண்டுவரும் உளவுத் தரவுகள். எழுத எளிதாக இருக்கிறது.> ஆனால் அவர்களது வாழ்க்கை நாம் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அதிசயங்களில்> ஒன்று.>> ஒரு ராணுவ முகாமை தாக்கி அழிக்கும் முடிவினை தலைமை எடுத்த பின்னர்> முதலில் புறப்படுவது உறங்காத கண்மணிகள். தாக்குதல் தொடங்குவதற்கு> ஓராண்டு, ஆறேழு மாதங்களுக்கு முன்னரே அவர்களது பயணம் தொடங்கும். பெரிய> முகாமென்றால் ஆயிரத்திலிருந்து, ஐந்தாயிரம் ராணுவத்தினர் வரை இருப்பார்கள்..> முட்கம்பி வேலிகள், கண்ணிவெடி வெளிகள், கண்காணிப்புகோபுரங்கள், ஐம்பது> மீட்டருக்கு ஒரு காவல் அரண் இவை அனைத் தையும்கடந்துதான் ஓர் இரவுப்பொழுதில்> ஊடுருவி உள் நுழைவார்கள்.>> உள் நுழைந்தபின் அந்த முகாம் குறித்த முழு தகவல்களையும் திரட்டி வரைபடமாக்கி> முடித்த பின்னரே அங்கிருந்து வெளியேறுவார்கள். எங்கெல்லாம் கண்ணி வெடிகள்> விதைக்கப்பட்டிருக்கின்றன, பீரங்கித் தளம் எந்த இடத்தில் இருக்கிறது, மின்> இணைப்புகளுக்கான தலைமையிடம் எங்கிருக்கிறது, முன் அரணில் எத்தனை ராணுவத்தினர்> நிற்கின்றனர், அவர்கள் என்ன ரக துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என அத்தனை> தகவல்களையும் சேகரித்து முடிக்க பல வாரங்கள் ஆகும். எதிரியின் கண்களில் படாமல்> அவர்களது நரம்பு மண்டலத்திலேயே குடியிருந்து இத்தனை நாட்கள் எப்படி அவர்களால்> இயங்க முடிந்ததென்பதை அறிந்தால் நீங்கள் உங்களையுமறியாமல் வியந்து> தலைபணிவீர்கள்.>> இரவுகளில்தான் இவர்கள் இயங்குவார்கள். இயங்கவும் முடியும். பகலெல்லாம்> இவர்கள் எங்கு பதுங்கியிருப்பார்கள் தெரியுமா? இலங்கை ராணுவத்தினர்> பயன்படுத்தும் கக்கூஸ் கழிவுகள் வந்திறங்கும் மலக் கிணறுகளில், ஆயிரம்,> ஐந்தாயிரம் ராணுவத்தினர் இருக்கும் மலக்கிணறு பற்றி எழுதவே நாற்றம்,> அசிங்கமாக அருவருக்கிறது. நினைக்க குமட்டு கிறது. அக்கிணறுகளுக்குள்> நாட்கணக்கில், வாரக் கணக்கில் தங்கியிருப்பதென்றால் எந்தளவுக்கு இலட்சிய> உறுதியும், சுயம் அறுத்த அர்ப்பணமும் வேண்டுமென எண்ணிப்பாருங்கள். இதனை> எழுதுகின்றபோதே அந்தக் கண்மணிகள் காவி யங்கள் படைத்த தமிழீழத் திசைநோக்கி> விழுந்து தொழவேண்டும்போல் உணர்வெழுகிறது.>> எதிரியின் பாசறைகளது கழிவுக் கிணறுகளில் பகல் முழுதும் நின்று> சாய்ந்துறங்கி இரவெலாம் கண்விழித்துப் படம்பிடிக்கும் இவர்கள், ஊடுருவி> உள்ளிருக்கும் நாட்களில் வாழ்வது வைட்டமின் மாத்திரைகளில். குடல்வற்றி> சுருங்கி ஒட்டிப் போகாதிருக்கவேண்டி பிஸ்கட்டுகளும் ரஸ்க்கும் கணக்கு> பார்த்துச் சாப்பிடுவார்கள். நன்றாகச் சிங்களம் பேசும் லாவகமும், கூடவே> சுட்டித்தனமும் கொண்ட கண்மணிகளென்றால் நள்ளிரவுவரை வேவுத் தகவல்கள்> சேகரித்துவிட்டு சிலமணிநேரம் ராணுவத்தினரின் கூடாரங் களிலேயே> படுத்துறங்கி வேடிக்கை செய்வதும் உண்டாம். இயக்கம் இட்ட பணி முழுமையாய்> முடிந்தபின் உள்துழைந்ததுபோல் ஓர் இறுக்கமான இரவில் வெளியேறுவார்கள்.> பிடிபட்டு கொடும் சித்ரவதைகளுக்குப்பின் கொல்லப்படும் துயரங்களும்> நடப்பதுண்டு.>> உறங்காத கண்மணிகள் கொண்டுவரும் தரவுகளின் அடிப்படையில் எதிரியின் முகாம்> போலவே ஒன்றை கட்டியெழுப்பி உருவாக்கு வார்கள் புலிகளின் பயிற்சிப்> பிரிவினர். முன்பொரு கட்டுரையில் தமிழீழ வரலாறு தந்த ஈடு இணையற்ற> பயிற்றுவிப்பாளர் கடாஃபி அவர்களை கெஞ்சி மன்றாடி பயிற்சி முகாம் ஒன்றினைப்> பார்வையிட்டது பற்றிக் குறிப்பிட்டி ருந்தது உங்களில் சிலருக்கு> நினைவிருக்கலாம். எந்த இடத்தில் என்ற விபரக் குறிப்பை இங்கு தவிர்க்க> விரும்புகிறேன்.>> பயிற்சி முகாம் நுழைவாயிலில் அவர்கள் பொறித்து வைத்திருந்த இரு வசனங்கள்> மறக்க முடியாதவை.. வாயில் முகப்பில் அவர்கள் எழுதியிருந்தது: ""கடுமையான> பயிற்சி, இலகுவான சண்டை.'' எத்துணை பெரிய உண்மையை மின்னிடும் சொல்லாடல்.> கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை. காட்டுவெளி போன்ற புதர் பரப்பில் துண்டோ,> பாயோ இன்றி தரையில் படுத்துறங்க வேண் டும். பாம்பு வரலாம், தேள் கடிக்கலாம்,> எதுவேண்டுமானாலும் தங்கள் மீது ஊரலாம். நள் ளிரவு 12 மணிக்குத் தான்> படுத்திருப் பார்கள். மூன்று மணிக்கு விசில் ஊதப்படும். மின்னல் வேகத்தில்> துடித்தெழுந்து ஆயுதத்துடன் முடை நாற்றமெடுக்கும் இடுப்பளவு சாக்கடைக்குள்> குதித்து நிலை யெடுக்க வேண்டும். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு அசையாது> அப்படியே நிற்கவேண்டும். உடலைவிட மன> உறுதிக்குத்தான் இங்கு பயிற்சி. பயமும், பணிந்து போகும் குணமும், தாழ்வு மனமும்> இயல்பிலேயே கொண்டதொரு இனத்தினது மரபணுவில் போர்க் குணம் ஏற்றிப் புடமிடும்> பாசறை!>> பயிற்சி முகாம் நுழைவாயிலில் பொறித்து வைத்திருந்த பிறிதொரு வசனம்.> ""ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.''> உபயம் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார்கள்..>> ""இந்த என் கையாலேயே எங்கள் செல்வங்களை ஏழு போராளிகளை நான்> கொன்றிருக்கிறேன்'' என்று கடாஃபி சொல்லும்போதே அவரது உடல் அதிர்ந்து> கண்கள் ஒருகணம் துயரத்தில் ஆழ்ந்ததை கவனித் தேன். "உறங்காத கண்மணிகள்'> கொண்டுவரும் தகவல்களின் அடிப்படையில் எதிரி முகாமையே "டம்மி'> உருவாக்குவார்களென்று சொன்னே னல்லவா? ஆனால் பயிற்சியோ நிஜ சண்டையாக> இருக்கும்.. புலிகளே இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் சிங்கள> ராணுவம்போல் நிலையெடுப்பார்கள்.>> உதாரணமாக, உறங்காத கண்மணிகள் தந்த தகவலின் படி எதிரி முகாமின் முன்> அரங்கில் மூன்று அரண் நிலை களும் அவற்றின் பின் முப்பது ராணுவத்தினர் ஏ.கே.47> துப்பாக்கிகளோடும் நிற்கிறார்களென்றால் அவ்வாறே இங்கும் புலிகள் அதே> ஆயுதங்களோடு நின்று சுடுவார் கள். நிஜமாகச் சுடுவார்கள். அதனை எதிர்கொண்டு> எப்படி அந்த அரண் நிலைகளை தாக்கி கைப்பற்றுவதென்பது தான் பயிற்சி. மின்னல்> மழைபோல் பீறிப் பறந்து வரும் துப்பாக்கி ரவைகளின் தூரம்- வேகம் இவற்றை கணநேரத்> தில் கணித்து தலையை தாழ்த்தியும் வலது இடது புறங்களில் வெட்டிச் சரிந்தும்> தரையில் பொத்தென விழுந்து படுத்தும் அவர்கள்களமாடும் காட்சியினை இரண்டு> நிமிடங்களுக்கு மேல் தாங்குகிற வலு உங்களதும்> எனதும் இதயங்களின் ரத்தக்குழாய்களுக்கு நிச்சயம் இல்லை.>> கடாஃபி சொன்னார் : ""என்ட கையாலெ ஏழு போ ராளிகள் செத்தது தாங்கஏலா வேதனைதான்.> ஆனா அத்தகைய பயிற்சியாலெ நிஜ சண்டையில் எழுநூறு போராளிகளின் உயிரை நாங்கள்> பாதுகாக்கிறோம்'' ஆம் கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.>> இதுவரை எழுதிவிட்டு இரவு 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றேன். அதிகாலைவரை> உறக்கம் வரவில்லை. குவார்ட்டர், பிரியாணி, கைப்பணம் இல்லாமல் துண்டுப்பிரசுரம்> விநியோகிக்கக்கூட தொண்டர்கள் இல்லை என்ற அரசியல் களப்பணி காட்சியை கடந்த> பாராளுமன்றத் தேர்தலின்போது கண்ட எனக்கு உறங்காத கண்மணிகளின் நினைவு உயிரைப்> பிழிந்தது. முன்பொருமுறை நான் குறிப்பிட்டதுபோல் சிலுவைப் போர்களுக்குச்> சென்றவர்களுக்கும், ஜிகாத் போருக்குப் போனவர்களுக்கும் மரணத்திற்குப் பின்> பரலோகப் பரிசு இருந்தது.>> ஆனால் தமது தமிழ் தலைமுறைகள் ஒருநாள் விடுதலைபெற்று சுயமரியாதையுடன் தமது> தாயகத்தில் வாழ்வார்கள் என்பதைத் தவிர இந்த உறங்காத கண்மணிகளுக்கு வேறென்ன> இருந்தது? இத்துணை அர்ப்பணமும், தியாக உணர்வும் கொண்டு வரலாற்றுப் பேரதிசயமாய்> எழுந்த ஒரு விடுதலை இயக்கத்தை உலகின் அத்தனைபேரும் சேர்ந்து முற்றுகையிட்டு,> வதைத்து தகர்த் திட தமிழ் இனம் என்னபாவம் செய்தது... நாமெல் லாம் கையாலாகாத> வர்களாய் பார்த் திருக்கவல்லவா இக் கொடுமை நடந்தேறி யது... என்றெல்லாம் எண்ண> மனம் உண்மையிலேயே ஆற்றுப் பெற முடியாமல் தவிக்கிறது.>> கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பில் இருந்தபோது போராளி ஒருவர் பகிர்ந்து கொண்ட> பிறிதொரு பதிவு இதனை படிக்கிற உங்களால் மரணம்வரை மறக்க முடியாத> ஒன்றாய் இருக்கும். பெருமழை பெய்த ஒரு நாள். இடத்தின் பெயர் சரியாக ஞாபகம்> இல்லை. கஞ்சிக்குடிச்சி ஆறு என்று நினைக்கிறேன். சிறியதோர் ராணுவ முகாம் மீது> அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்துவிட்டு திரும்புகிறார்கள் 17 போராளிகள்.> திரும்பி வரும்வேளை அக்காட்டாற்றில் பெருவெள்ளம். கடக்க முடியாதென்ற நிலை.> ஆற்றின் அப்பக்கமாய் இருந்த தம் தளத்திற்கு "வாக்கி-டாக்கி'யில் பேசி கயிறு> கொண்டு வரச்செய்து எப்படியோ இருபுறமும்> இழுத்துக் கட்டி அதைப் பிடித்துக்கொண்டே ஆற்றைக் கடக்கிறார்கள். இவர்கள்> நட்டாற்றை கடக்கையில் பிற முகாம்களிலிருந்து திரண்டு வந்த சிங்கள ராணுவத்தினர்> கயிறை அறுத்துவிட 17 பேரையும் பெருவெள்ளம் அடித்துச் செல்கிறது. ஆற்றங்கரைகளை> அறிந்தவர்களுக்குத் தெரியும், கரையோரங்களில் மரமும் இல்லை- செடியும் இல்லை> என்பது போன்ற ஒருவகை புதர்கொடி இருப்பது. அப்படியொரு புதர்கொடியை ஒரு போராளி> பற்றிப் பிடித்துக்கொள்கிறார். அடுத்த நிமிடம் வெள்ளம் அடித்துவரும் இன்னொரு> போராளியும் அதே புதர்கொடியை பிடிக்க எத்தனிக்கிறார். முதலில் அக்கொடியை> பிடித்து நின்ற போராளிக்குத்> தெரிகிறது இரண்டு பேரையும் தாங்கும் வலு அந்த புதர்கொடிக்கு நிச்சயம்> இல்லையென்பது. இரண்டாவது வந்த போராளி கொடியைப் பிடிக்க கையை நீட்டவும்> முதற்போராளி, ""நீ பத்திரமா போய் சேர்ந்திடப்பா'' என்று சொல்லிக்கொண்டே> தன் கையை எடுத்து பெருவெள்ளத்தோடு போகிறார். எங்கோ கடலுக்குள் போன அவரது> உடல்கூட கிடைக்கவில்லையாம்.>> தமிழர்களே, நண்பர்களே! கேளுங்கள், உரத்துச் சொல்கிறேன். அருட்குருவாகிய நான்> அந்த புதர்கொடியினை முதலில் பிடித்தவனாய் நின்றிருந்தால் நிச்சயம்> இன்னொருவருக்காய் என் கைகளை எடுத்திருக்கமாட்டேன். நம்மில் பைபிள், குர்ரான்,> நாயன்மார்கள், ஆழ்வார் களையெல்லாம் படிக்கிற எத்தனைபேர் இத்தகைய> தியாகத்திற்குத் தயாராகியிருப் போம் என ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். கண்கண்ட> எங்கள் தெய்வீகச் செல்வங்களே நீர் வாழ்ந்த திசை நோக்கி கரம் கூப்பினோம்.>>

ஜெகத் கஸ்பாரின் மறக்கமுடியுமா? நக்கீரன் வார இதழிலிருந்து>>>>>

No comments: