WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, July 2, 2009

சிறிலங்காவால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - எலீ வீசல்...!!!

சிறிலங்காவால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - எலீ வீசல்

ஐரோப்பிய யூத இனப் பேரழிவில் (Holocaust) பிழைத்தவரும், யூத இனச்சின்னமும், நோபல் விருது பெற்றவருமான, பேராசிரியர், எலீ வீசல் அவர்கள், தனது இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியொன்றில், “எங்கே சிறுபான்மையினர் அடக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம், நாம் எமது குரல்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும். நம்பத்தகச் செய்திகளின்படி, சிறிலங்கா அதிகாரிகளினால் தமிழ் மக்களினது உரிமைகள் பறிக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த அநியாயம் கட்டாயமாக நிறுத்தப்படவேண்டும். தமது தாய்நாட்டில், தமிழ் மக்கள் அமைதியுடன் செழிப்படைய அனுமதிக்கப்படவேண்டும்,” என்று கூறியுள்ளார்.

அவரது கற்றறிதல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகளுக்காக, பேராசிரியர் வீசல் பல விருதுகளைப் பெற்றவர். சுதந்திரத்துக்கான ஜனாதிபதி பதக்கம், அமெரிக்க காங்கிரஸ் தங்கப் பதக்கம் மற்றும் விடுதலை விருதுக்கான பதக்கம் போன்றன இவற்றுள் அடங்கும்.

கனக்றிகற் வைத்தியரும், அமெரிக்கா-செயற்பாட்டு அமைப்பான, இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் (Tamils Against Genocide) அமைப்பினது அங்கத்துவருமான, Dr. எலின் ஷான்டர், எலீ வீசல் அறநிறுவனத்தோடு, வடக்கு-கிழக்கு நிலமைகள் தொடர்பான செய்திகளை அடிக்கடி தெரிவித்து, செயற்பட்டுவந்துள்ளார் எலீ வீசல் நிறுவனமானது, தடுப்பு முகாம்களில் கட்டாயப்படுத்தி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 300,000 தமிழ் மக்கள் தொடர்பாகவும் செய்திகளை ஒழுங்காகப் பெற்று வந்துள்ளது, என னுச. ஷனடர் கூறியுள்ளார்,

“நாங்கள் கேட்டிருந்த தமிழ் மக்களுக்கான ஆதரவை பேராசிரியர் வீசல் தந்தமைக்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். இவ்வாதரவு தற்போது அவரது இணையத்தளத்தில் அதிகாரபூர்வமாக்கப்பட்டுள்ளதால், யூதப் பேரழிவு மற்றும், போர்க்குற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் சிறிலங்கா வழக்கையும் கையில் எடுக்கும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்,” என Dr. ஷான்டர், தமிழ்நெற் இணையத்துக்கு, மேலும் தெரிவித்துள்ளார்.

Dr. ஷான்டர், தமிழ் மக்களினது சுயஆட்சிக்கான உரிமையைச் சட்டரீதியில் திரும்பப் பெறுவதற்காகச் செயற்படும், அமெரிக்கா தமிழ் அரசியல் செயற்பாட்டுக் குழுவின் (USTPAC) உப தலைவராகவும் உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1978ஆம் ஆண்டில், ஜனாதிபதியின் யூதப் பேரழிவு ஆணைக்குழுவினது தலைவராக எலீ வீசல் அவர்களை, ஜனாதிபதி கார்றர் அவர்கள் நியமித்திருந்தார். பாரிஸில் அமைந்துள்ள கலாச்சாரங்களினது அகில உலகப் பள்ளியின் (Universal Academy of Cultures) தலைவரும் மற்றும் எலீ வீசல் அறநிறுவனத்தின் (Elie Wiesel Foundation) தலைவராகவும் எலீ வீசல் அவர்கள் செயற்படுகிறார்.

எலீ வீசல் அறநிறுவனமானது, வேறுபாடுகள் மற்றும் அநியாயங்கள் போன்றவற்றுக்கு எதிராகச் செயற்படுவதற்காக, எலீ மற்றும் அவரது மனைவியால், உருவாக்கப்பட்டதாகும். உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பட்டங்களை எலீ வீசல் பெற்றுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.pathivu.com/news/2481/54/.aspx

http://www.eliewieselfoundation.org/inthenews.aspx

Say Thanks to Him

http://www.eliewieselfoundation.org/contactus.aspx

epinfo@eliewieselfoundation.org

Muthamizh

Chennai

No comments: