From: C.S Baskaran [mailto:baskaran@baskar.net]
Sent: Wednesday, August 26, 2009 3:02 PM
To: 'baskaran@baskar.net'
Subject: தமிழகத்தின் தலைஎழுத்தே இது தானா?
ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் நடிகர் விஜய் விபரீதம் ஆரம்பம் ?
தமிழ் நாட்டின் முன்னனி நடிகரான விஜய்க்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்துள்ளது. தவறில்லை இருப்பினும் சோனியா காந்தியுடனும், ஈழத்தமிழர்களை அவதூறாகப் பேசிய ராகுல் காந்தியிடமும் கூட்டுச்சேர முனைவதே அவர் பெரும் தவறிழைக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இன்று (புதன்கிழமை) டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் இளைஞரணித் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
இந் நிலையில் நடிகர் விஜய் எந்தத் துணிச்சலில் சோனியாவுடன் கைகோக்கிறார் என்பது ஆச்சரியமூட்டுகிறது. ஜங்ரன் இன்டர் நாசனல் நிறுவனம் விஜய்யை வைத்து பல படங்களை எடுத்துள்ள நிலையில் மேலும் சில படங்கள் நடிக்க நடிகர் விஜய் ஒத்துக்கொண்டுள்ள நிலையிலும் இந்தப் புதுச் சர்சை கிளம்பியுள்ளது. இவரது இந்த நடவடிக்கை ஈழத் தமிழர்களையும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் இது பாதித்துள்ளது.
இனி வரும் காலங்களில் நடிகர் விஜய்யின் படங்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவும் வாய்ப்புண்டு. இதனால் இவர் தனது நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பதில் கூறவேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள்
சினிமாக்கரனை விட தமிழ்நாட்டில் வேறு ஒரு முதுகெலும்புள்ள இளம் தமிழன் இல்லையா? இன்னும் சினிமாக்காரன் கையில் தான் தமிழகத்தின் எதிர் காலம் தங்கி உள்ளா தா? அப்துல் கலாம் கண்ட கனவு எங்கே? தமிழ்நாடு எப்போது திருந்தப் போகிறது? தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற என்று ஒரு, படித்த, நீதி, நியாயம், தெரிந்த, தமிழையும் தமிழர்களையும் ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு போகக்கூடிய இளம் தமிழன் வர மாட்டானா? தமிழகத்தின் தலைஎழுத்தே இது தானா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment