கொழும்பு 14/11/2009, 21:59
20,000 தமிழ் இளைஞர் யுவதிகள் கடும் வதைகளுக்கு உள்ளாகின்றனர் - கொழும்பு ஊடகம்
ஸ்ரீலங்கா அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்துள்ள சுமார் 20,000 தமிழ் இளைஞர் யுவதிகளும் கடுமையான சித்திரவதைகளுக்கு முகம் கொடுப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புனர்வாழ்வு முகாம்கள் என்ற போhவையில் ஸ்ரீலங்கா அரச படைகள் சித்தரவைத கூடங்களை நடத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் சிலரை மேற்கோள் காட்டி அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை மாலை என இரு வேளையும் ஸ்ரீலங்காவின் தேசியக் கொடிக்கு முன்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுமாறும் தேசிய கொடிக்கு இராணுவ மரியாதை டிசலுத்துமாறும் நிர்பந்திக்கப்படுவதாகவும் அதனை உரிய முறையில் மேற்கொள்ள தவறுபவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெணகள் தினமும் இரவு வேளைகளில் இராணுவத்தால் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மறு நாள் காலை அழைத்து வரப்படுவதாகவும் சிலர் ஒருபோதும் அழைத்து வரப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு விநியோகமும் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த முகாமில் தினமும் சித்தரவதைகளை அனுபவிக்கும் இளைஞர்களும் யுவதிகளும் பல சந்தர்பங்களில் தற்கொலைக்கு முயல்வதாகவும் எனினும் அது சாத்தியப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாம்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது வேறு அரச சார்பற்ற அமைப்புகளோ சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
pathivu.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment