சிறீலங்கா - சின கடற்படையினர் இணைந்து தமிழக மீனவர்ளுக்கு தாக்குதல்
திகதி: 15.11.2009 // தமிழீழம்
தமிழக மீனவர்கள் மீது தொடந்து சிறீலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களின் வலைகளையும் அறுத்து எறிந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் கோவிந்தசாமி (55) என்பவர் இந்திய எல்லை 6-ம் பாகத்தில் படகில் மீன்பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு படகில் வந்த சிறீலங்கா கடற்படையினருடன் சீன இராணுவத்தினர் சிலரும் இருந்தனர். அப்போது சீன இராணுவத்தினர் கோவிந்தசாமியை தாக்கி அவரது உடலில் சுடு தண்ணீரை ஊற்றியுள்ளனர். படுகாயத்துடன் தப்பி கரை திரும்பிய கோவிந்தசாமி இது குறித்து அறந்தாங்கி ஆர்.டி.ஓ. நாகேந்திரனிடம் புகார் செய்துள்ளார்.
அப்புகாரில் தன்னை சீன இராணுவத்தினர் தாக்கி கொதிக்கும் சுடு தண்ணீரை ஊற்றியதாக குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து சீன இராணுவத்தினரும் தாக்கியது புதிய பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளது.
--------------------------------------------------------------------------------
www.sankathi.com contact: sankathireaders@gmail.com
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment