WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, November 19, 2009

சாரணீய இயக்கத்து துடிப்பும்,துணிவும், துல்லியகணிப்பும், துவளாத மனமும்,பொறையும் மிகநன்றே!



சாரணீய இயக்கத்து துடிப்பும்,துணிவும்,துல்லிய கணிப்பும்,
துவளாத மனமும்,பொறையும் மிக நன்றே!
---------------------------------------------------
யாழ் இந்துக்கல்லூரி அன்று தந்த புகழ், மகிழ்வு, அறிவு,
அனுபவம் எம்மை விட்டு போய்விடுமா!

என்றும் அழியாது !அகலாது ! மறையாது!சிலையாய்
என்றும் எம்நினைவில் நிலைத்திருக்கும்

இளம் குருளையனாய் ,பின் சாரணனாய், யான் பெற்ற இன்பம்
இவ்வையகம் உள்ளவரை பெற ,எம்எழுத்தால்
பதிவிலிடவந்தவரை வாழ்த்துகிறேன்!
நீடுவாழ வாழ்த்துகிறேன்!!பல்லாண்டு வாழ்கவே!

தாய் தந்த பால் அமுதும், தந்தை தந்த அறிவுரையும் யாழ் இந்து தந்த
மொழி, கணித,விஞ்ஜான கல்வியும்,

எம்மை வல்லுலகின் முன்றலிலே வல்லவராய்,நல்லவராய் உயர்த்தியதே!
பெருநன்றி! நன்றி ஐயா!

பன்மொழியும், பல்கலையும், பல்தொழிலும்,பல்நுட்பமுமாய்,
பல்இனமக்களுடன் பழகுமுறை கற்று,

பண்பாடு,தமிழினத்து தூதுவராய் நல்லுலகின் மூலையெல்லாம்
நாம் பரவி உயர்ந்தோமே!பயன்பெற்றோம்!

சாரணீய இயக்கத்து துடிப்பும்,துணிவும்,துல்லிய கணிப்பும்,
துவளாத மனமும்,பொறையும் மிக நன்றே!

அன்பாயும்,பண்பாயும்,அறிவாயும் எமை வழிநடாத்திய
ஆசிரியப் பெருந்தகையர் வாழ்க! வாழ்கவே!

ஆசிரியப்பெருந்தகையர்: சிவசுப்ரமணியம் ,சிவநேசராஜா,நல்லையா,
முத்துகுமாரசாமி எனப் பற்பலர்!

தில்லை,யோகா,அரிச்சந்த்ரா,குகன்,அமர்நாத்,முருகானந்தா,விவேகானந்தா,
சிவாஜி,நந்தன் என நண்பர்குழாம்!

சுப்ரமணியம் பூங்கா,புதுக்குடியிருப்பு,கிளிநொச்சி,முறிகண்டி,
கீரிமலை நடைபயணம்,முகாம் வாழ்வு!ஆகா!

எதை மறப்பது? எவரை மறப்பது? இன்றும் பசுமையாய்
இயல், இசை,நாடகம்,சமையல்! அந்த நாள் வந்திடாதோ!

எம்மண்ணை மறப்பதா! எம்மக்களை மறப்பதா!எம்மொழி,
எம்சமயம் இங்கும் வளர்க்கின்றோம்!ஒற்றுமை பேணுவோம்!

NALLIAH SHANMUGAPPIRABU/TRANSLATOR/TEACHER/CO-JUDGE-NORWAY
President:Drammen Hindu Cultural Society/Vinayagar Temple
Organiser:Drammen Tamil Friendship Society
shanmugappirabunalliah@gmail.com

No comments: