Tamil library and archives in Geneva
Fra: info@tamoul.ch
Sendt: 6. november 2009 22:56:27
Til: geneva@tamoul.ch
வணக்கம், தமிழர் ஆவணக் காப்பகம் - ஜெனீவா நகரில் முயற்சி தமிழ் மற்றும் தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளை இருப்பதையாவது காப்பாற்றிவிட பலரும் விரும்புகின்றனர். வரலாற்றின் தொன்மைகள் திரும்ப திரும்ப பதிவாக்கம் செய்யப்படல் வேண்டும். புதிய சிந்தனைகள் புகுத்தப்பட்டு மேம்படுத்தப்படல் வேண்டும். எமது வாசகர்களின் வேண்டு கோள்களிற்கு இணங்க தமிழ் ஆவணங்களை பேணி அதனை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஜெனீவா நகரில் அமைக்கும் திட்டம் எழுந்துள்ளது. தமிழ் மற்றும் தமிழரை பற்றி ஆய்வு செய்யும் சுவிஸ் பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பிற நாட்டவர்களிற்கு இது பெரும் உதவியாக அமையும். புலத்தில் வாழும் தமிழ் சிறுவர்களிற்கும் தமது வரலாற்றை அறியவும் வேர்களை புரியவும் உதவும். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பேணவும் படைப்பாளிகளை ஊக்குவிக்கவும் தூண்டும். கலை இலக்கியங்களிற்கு அப்பால் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இவ் அமைவிடம் காட்சிபெறும். இணைய வலைத்தளங்கள் நிலையற்றதொன்று என்பதால் அவற்றை பதிவுசெய்து பாதுகாக்கப்பட வேண்டியதும் புலம்பெயர் சமூகத்திற்குள்ள கடமையாகும். எமது முயற்சிக்கு ஜெனீவா அரசசார்பற்ற அமைப்புகள் சுவிஸ் படைப்பாளிகள் சங்கம் உதவ முன்வந்துள்ளன. தமிழராகிய நாங்களும் இம் முயற்சிக்கு உதவினால் செயற்பணியை விரைவாக்கிட முயல்கிறோம். தாங்கள் பின்வருமாறு உதவலாம். * தமிர் வரலாற்று ஆவணங்களை இனம்காண உதவுதல்* தமிழ் நூல்கள் வெளியீடுகள் சேகரித்தல்* தமிழர் நிகழ்வுகள் விழா பிரசுரங்கள் சேகரித்தல்* வழிபாட்டு தலங்களின் வரலாறும் சேவையும்* பிறமொழி தமிழ் ஆர்வலர்களின் விபரம்* புலம்பெயர் வாழ்வின் அனுபவங்கள் மறக்கமுடியாதவை... பேணவேண்டியவை இவற்றை சேமியுங்கள். நண்பர்கள் அயலவர்கள் உறவினர்களிடம் அறியத் தாருங்கள். நீங்கள் விரும்பும் பெயரில் ஜெனீவா தமிழர் ஆவணக் காப்பகத்தில் பேணப்படும். இது ஒரு இலாப நோக்கற்ற அரச சார்பற்ற அமைப்பாகும். இவ் ஆவணக்காப்பகம் சுவிஸ் சட்ட முறைக்கு உட்பட்ட பொதுநூல் நிலையமாக இயங்கும். அனைவரும் பயன்படுத்தலாம். இவை தொடர்பான ஆக்கபூர்வமான சிந்தனைகளை தகவல்களை வரவேற்கிறோம். தமிழால் மேன்மை கொள்வோம். நன்றியுடன்,ஜெனீவன் info@tamoul.ch மேலதிக தொடர்புகளிற்கு: http://tamoul.ch/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment