
25 வருடங்களின் பின் சொந்த இடம் திரும்பும் கெவிலியாமடு தமிழர்கள் (பட இணைப்பு)
வீரகேசரி இணையம் 12/3/2009 11:51:55 AM - 1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்த இன வன்முறைகளையடுத்து மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசமான கெவலியாமடு பகுதியிலிருந்து வெளியேறிய தமிழ் விவசாயிகள் 25 வருடங்களின் பின்பு தற்போது அங்கு திரும்பி மீண்டும் விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பிட்ட 25 வருட காலத்தில் அவ்வப்போது போர் நிறுத்த உடன்படிக்கைகள் என்றும் சமாதானப் பேச்சுவார்த்தை என்றும் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும், அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு, அந்த நேரத்தில் கூட அச்சமடைந்திருந்த இவ்விவசாயிகள் தற்போது குடும்பத்துடன் அங்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பாதுகாப்பு தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் பேரிலேயே தாம் இங்கு தற்போது விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக தமிழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்தில் தமிழ் விவசாயிகள் விவசாயச் செய்கைக்குத் திரும்பியது போல் தமது குடும்பங்களுடன் மீளக்குடியமர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தாமும் இருப்பதாக அக்கிராமத்தைச் இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழ் விவசாயிகள் தற்காலிக கொட்டில்களில் தங்கியிருந்து விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக மேலதிக பொலிஸ் காவலரண் ஒன்றும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடியிலிருந்து தினமும் கெவுலியாமடுவுக்கு வக்கியல்ல ஊடாக பஸ் சேவையொன்றும் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் மேற்கொண்ட முயற்சியின் பேரில் நடைபெற்று வருகின்றது.
அந்தப் பகுதிக்கு வாரத்தில் 2 - 3 நாட்கள் விஜயம் செய்து விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு தான் கொண்டு வருவதாகவும் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் கூறுகின்றார்.
தமிழ் - சிங்கள விவசாயிகளிடையே பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தீர்வைக் காண்பதற்காக இரு தரப்பிலிருந்தும் தலா 5 பேர் கொண்ட குழுவொன்று பிரதேச செயலாளர் தலைமையில் முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தற்போது 900 ஏக்கரில் தமிழ் விவசாயிகள் விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
virakesari.lk . Express Newspapers Ceylon (Pvt) Ltd
No comments:
Post a Comment