WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, December 6, 2009

ஏன் தான் சுட்டார்கள் தெரியவில்லை ?உயிருடன் பிடித்திருக்கலாம் தானே ?இவர்கள் மட்டும் தானா இப்படி போகின்றார்கள்?

கல்குடா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு (பட இணைப்பு)

வீரகேசரி இணையம் 12/6/2009 9:53:58 AM - மட்டக்களப்பு கல்குடா கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லபபட்ட இளைஞரின் சடலம் மரண விசாரணையின் பின்பு பெற்றோரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

சம்பவத்தில் கல்லடி திருச்செந்தூரைச் சேர்ந்த கிறிஸ்ரியன் ரொபின்சன் ( 21 வயது) என்ற இளைஞர் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

வாழைச்சேனை பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹூசைன் முன்னிலையில் நடைபெற்ற மரண விசாரணையில் இறந்தவரின் பெற்றோர் மற்றும் பொலிஸார் சாட்சியமளித்தனர்.

சடலத்தை பெற்றோரிடம் கையளிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட பதில் நீதிபதி பிரேத பரிசோதணை அறிக்கை கிடைக்கும் வரை தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்தார்.

இதேவேளை தனது மகனின் இந்த சட்டவிரோத பயணத்தை தாம் விரும்பாத போதிலும் மகன் பிடிவாதம் பிடித்து இந்த பயண ஏற்பாடுகளை செய்திருந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இறந்தவரின் தந்தையான செபமாலை கிறிஸ்ரியன் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

" இந்த பயண ஏற்பாடடிற்குரிய முகவரை எனக்கு தெரியாது .மகன் தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.நான் முற்றாக விரும்பவில்லை.5 லட்சம் ரூபாவை இதற்கென செலுத்தியிருந்தார்.இதன் காரணமாக எனக்கும் மகனுக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை கூட ஏற்படுவது உன்டு.குடும்பத்தில் எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டும் தான் அதில் மூத்த மகனை நான் இப்போது இழந்து விட்டேன்." என்றார்.

ஏன் தான் சுட்டார்கள் தெரியவில்லை ?உயிருடன் பிடித்திருக்கலாம் தானே ?இவர்கள் மட்டும் தானா இப்படி போகின்றார்கள்? , என்ற வினாக்களை எழுப்பும் அவர்,ஏற்கனவே பலர் போயிருக்கின்றார்கள் ,பிடி பட்டிருக்கின்றார்கள் ,தற்போதும் சென்று கொண்டிருக்கின்றார்கள் தானே என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

5 வருடங்கள் இந்தியாவில் கம்பியூட்டர் கல்வி கற்ற தனது மகன் சிநேகிதர்களுடன் சேர்ந்து தான் இந்த முடிவிற்கு வந்ததாகவும் ,வீட்டை விற்று 5 லட்சம் ரூபாவை முகவரிடம் செலுத்தியதாகவும் கூறும் அவரது தயாரான சுலோச்சினி கிறிஸ்ரியன்,

"பணம் செலுத்தி 45 நாட்களான போதிலும் முகவர் தங்களை ஏமாற்றி வந்ததாகவும் ,இறுதியாக பணத்தை கேட்டுச் சென்ற போதே இப்படி நடந்துள்ளது." என்றும் கூறுகின்றார்.

சம்பவத்தில் இராணுவத்தைக் கண்டு தப்பியோடிய போது நீரொடையொன்றிற்குள் விழுந்த வேளை தனது வலது கையை முதலை கடிக்கு இலக்கானதாக கூறும் நொச்சிமுனையைச் சேர்ந்த கோபாலபிள்ளை ஞானசேகரம்,இந்த பயணம் ஆபத்தான பயணமாக இருக்கும் என்று தான் நினைத்திருந்தால் இந்த பயணததை நாடியிருக்க மாட்டேன் என்றும் தெரிவிக்கின்றார்.சுமார் 3 அரை லட்சம் ரூபாய் இந்த பயணத்திற்காக தான் செலுத்தியதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவை தொடர்பு கொண்ட போது,

"சம்பவதினம் இரவு 9.30 மணியளவில் வெளிச்சமின்றி மோட்டார் சைக்கிள் ஒன்றும் ,உழவு இயந்திரமொன்றும் வந்து கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இராணுவம் அதனை நிறுத்த முற்பட்ட போது அதில் பயணம் செய்தவர்கள் அதனை கைவிட்டு தப்பியோடிவிட்டனர்.இராணுவம் அதனை சோதனையிட்ட போது உலர் உணவுப் பொருட்கள் ,உயிர் காக்கும்அங்கிகள்- 29, காஸ் சிலிண்டர்கள் - 2 ஆகியன கைப்பற்றப்டப்டன.

இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.இதன் மூலம் இவர்கள் சட்டவிரோதமான பயணமொன்றை மேற்கொள்ள உத்தேசித்திருந்தனர் என்பதை அறிய முடிந்தது.

நேற்று அதிகாலை அந்த பகுதியில் இராணுவத்தினரால் சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்ட போது மறைந்திருந்த ஒருவர் இராணுவத்தின் துப்பாக்கியை பறிக்க முயன்ற சமயம் அது வெடித்ததி அவர் உயிரிழந்துள்ளார் " என பதிலளித்தார்.


virakesari.lk . Express Newspapers Ceylon (Pvt) Ltd ™ |

No comments: