சிறப்புச்செய்திகள் »
மனோகணேசனின் கைகளைப் பற்றிக் கதறியழுத காணாமற்போனோரின் பெற்றோர்கள்
பதிந்தவர்_ரமணன் on December 11, 2009
யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் வருகை தந்திருந்தபோது காணாமல் போனோரின் பெற்றோர்கள் அவரின் கைகளைப்பற்றிப் பிடித்துக் கதறியழுதனர்.
இந்தக் காட்சியைக் கண்ணுற்றவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிய உருக்கமான சம்பவம் நேற்று யாழ். வீரசிங்கம் மண்டப முன்றலில் இடம்பெற்றது.
மனித உரிமைகள் இல்லம் மனித உரிமைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்த விசேட நிகழ்வுகள் நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மனோகணேசனும் வந்திருந்தார்.
இதன்போது வீரசிங்கம் மண்டப முன்றலில் அவரைச் சூழ்ந்து கொண்ட காணாமல் போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தமது அவல நிலையை எடுத்துரைத்தும், தமது பிள்ளைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் மனோகணேசனிடம் உருக்கமாகக் கேட்டனர். அவ்வேளை பெற்றோர்கள் சிலர் அவரின் கைகளைப் பற்றிப் பிடித்துக் கதறி அழத்தொடங்கி விட்டனர்.
அவர்களின் கண்ணீரைக் கண்ட மனோகணேசனின் கண்களும் பனித்தன. தான் உரிய நடவடிக்கை எடுக்க சம்மபந்தப்பட்டவர்களிடம் அழுத்தம் கொடுப்பதாக அவர்களிடம் உறுதி கூறினார். மனோகணேசன் மக்கள் கண்காணிப்பு நிலையத்தின் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
WWW.MEENAKAM.COM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment