




ஈழத் தமிழ் அகதிகளுக்காக, வெள்ளையின மக்கள் நடத்திய பேரணி ஒன்று அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அவுஸ்திரேலிய அமைப்புக்களில் ஒன்றான அகதிகளுக்கான ஒன்றிணைக்கப்பட்ட மையம் (Refugee Action Collective) என்ற அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்புப் பேரணி, இன்று அவுஸ்திரேலிய மெல்பேர்ணில் நடைபெற்றுள்ளது.
நடந்து முடிந்துள்ள இந்தப் பேரணியின் சிறப்பு , இது தமிழர்கள் அல்லாத ஏனைய சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டது என்பதே. ஆயினும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு தமிழ் அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்கின. அனைத்து சமூகங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு உலகெங்குமிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்டது.
குறிப்பாக இலங்கையிலிருந்து வருகின்ற தமிழ் மக்களின் அகதிகளின் விடயம் அவுஸ்திரேலிய மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால் அதுபற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்வாகவும் இது அமைந்திருந்தது.
இக்கவனயீர்ப்பு நிகழ்வு பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்டிருந்தது:
- கப்பலிலில் வரும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கவேண்டும்.
- இந்தோனிசியா மற்றும் மலேசியா ஊடாக வரும் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்.
- அகதிகளாகவருபவர்களை நேரடியாக அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுவந்து அவர்களுடைய அகதி அந்தஸ்து பரிசீலிக்கப்படவேண்டும். மாறாக கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்ககூடாது.
ஸ்ரேற் நூலகத்தில் ஆரம்பமான கவனயீர்ப்பு நிகழ்வு பெடரேசன் சுதந்திர சதுக்கம் வரை பேரணியாக சென்று அங்கு நிறைவடைந்ததாக மெல்பேர்ண் தகவல்கள் தெரிவிக்கின்றன.
--
www.viduthalaiveeraa.blogspot.com
United Arab Emirates
No comments:
Post a Comment