
இலங்கைத் தமிழர் தங்கியிருப்பவை முகாம்கள் அல்ல ; அவை முள்வேலிச் சிறைச்சாலைகள் என்கிறார் சுஷ்மா!2009-12-06 05:23:14
இந்திய நாடாளுமன்றில் தமிழில் சாடல்
இலங்கையில் நிவாரண முகாம் களில் அடைக்கப்பட்டிருக்கும் 2.5 லட்சம் தமிழ் மக்களின் உயிர்க ளைக் குறித்து ஒட்டுமொத்த இந்தி யாவும் கவலைப்பட்டுக்கொண்டி ருக்கிறது. உண்மையில் அவை முகாம்கள் அல்ல. முள்வேலிச் சிறைச்சாலைகள். இவ்வாறு நேற்று இந்திய நாடாளுமன் றத்தில் தமிழில் பேசுகையில் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர் நிலைகுறித்து இந்திய அரசின் போக்கையும் நடத்தையையும் கண்டித்தும், உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய அவர் பல தடவைகள் தமிழிலும் பேசினார். பாரதியாரின் பாடல்களை அவ்வப்போது மேற்கோள் காட்டி சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார்.
அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள் கிழே:
ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவின் தமிழ் மக்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக ஒட்டுமொத்த இந்தியாவின் இதயத்துடன் நெருங்கிய விஷயம். இன் னொரு உயிருக்காக இரங்கக் கூடிய மனிதத் தன்மை ஒரு வனிடம் இல்லாவிட்டால் அவனது ஆன்மா செத்துப் போய் விட்டது என்கிறார் தமிழ்க்கவி பாரதியார்.
இலங்கையில் பெரும் அவலத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இந்த அரசு செய்யப் போகும் நிவாரண நடவடிக்கைகள் என்ன என்பதை மத் திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்ல வேண்டும் (இந்தக் கேள்வியை தமிழிலேயே கேட்டார் சுஷ்மா).
சமீபத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றாரே? அது ஏன். இதை அவர் விளக்க வேண்டும்.
தமிழர்கள் மிகப் பெரிய அவல நிலையில் உள்ளனர் என்று ஐ.நா. கூறுகிறது. இந்த நிலையில் இலங்கை முகாம்களின் நிலை குறித்து அறிய அங்கு போன இந் தியக் குழு ( தமிழகத்திலிருந்து சென்ற திமுக தலைமை யிலான ஆளுங்கட்சிக் கூட்டணிக் குழு) தாக்கல் செய்த அறிக்கை என்ன?அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?
இலங்கைக்கு பாரபட்சம் இல்லாமல் அனைத்து கட்சி களையும் உள்ளடக்கிய எம்.பிக்கள் குழுவை அனுப்பி ஆராய வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.பிக்களை மட்டும், தமிழர்களை மட்டும் அனுப்பி வைப்பதால் என்ன புண்ணியம். ஏன் அப்படி ஒரு குழுவை அனுப்பினீர்கள்? இந்தப் பிரச்சினை ஒட்டுமொத்த இந்தியா சம்பந்தப்பட்டது. அப்படி இருக்கையில் தேசிய அளவிலான குழுவைத்தானே அனுப்பியிருக்க வேண்டும்.
வெறும் தமிழர்களை மட்டும் அனுப்பி வைப்பதன் மூலம், மத்திய அரசு மிகவும் குறுகிய கண்ணோட் டத்துடன் நடந்து கொண்டுள்ளது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு இந்த அரசு அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்புமா என்றார் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட சுஷ்மா சுவராஜ்.இந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணவைப் பார்த்துக் சுஷ்மா கேட்டார்.......!!! அமைச்சர் அமைதியாக இருந்தார்.....!!!
Uthayan.com
No comments:
Post a Comment