நோர்வேயில் பழைய தமிழர் சமயம்! நோர்டிக்மொழிகளும் தமிழ்மொழியும்..!!!
---------------------------------------------------------------------
வெள்ளிப்பனி மலையின் மீதுலாவினோம்!இங்குவாழும்"விகிங்"மனிதர்பற்றி நாமறிந்தோம்!
வேற்றுமொழிகளுக்கு எங்கள் தமிழே!ஆதாரமோ?என எண்ணத் துணிந்தோம்!!ஆகா!!
"அம்மா,அப்பா" என்பதைப்போல், "மம்மா,பப்பா" என நோர்வேயில் அழைக்கின்றார்!
"மிக்க நன்றி" என நாம்கூறின், "மிக்க தாக்" என சுவீடிஸ் சகோதரர் கூறுகின்றார்!!
"நீ" என நாம் விழித்தால், "நீ" எனவே சுவீடிஸ் மொழியில் கூறுகின்றார்!எம் தமிழே!
விண்ணன் என எம் கருத்தில் பெயர் வைத்து "வின்னன்" என வெற்றியாளனையும்,
மீனா,சந்திரா,ரூபன் என எத்தனை பெயர்கள்! எம் தமிழுடன் எப்படி தொடர்பானதோ!
இந்தியின் கிளையை சார்ந்த நோர்டிக்மொழிகள்,தமிழுடன் தொடர்பு புதுமையன்றோ!!
"சூல்பெஸ்ட்" எனும் "சூரியவிழா" அறுவடையின் பின்வரும் தமிழ்ப் பொங்கலன்றோ!
அறுவடையின்பின் தானியக்கட்டினை வீட்டுமுகப்பில் தொங்கவிடல் நம்முறைதானே!
மணமுடித்த-புது தம்பதியர்க்கு அரிசிஎறிந்து வாழ்த்துவதும்!இனிய பால்சோறு உண்பதும்
தோசை,அப்பம்போல் அதேஅப்பமும்,கூழும்,கஞ்சியும்,இவர் வாழ்விலும் வந்தது புதுமை!
ஊடின்,தூர் எனும் பழைய"நோரோன்சமய"கடவுளர்,இந்துசமயத்து சிவனும்!விஷ்ணுவுமாம்!
இங்குள்ள கிறிஸ்தவபாதிரியார் இந்நாட்டு பத்திரிகையில் கட்டுரை வரைகின்றார்!அபூர்வம்!
தேவாலயத்து உச்சியில் சேவல் கொடி!உலோகத்தில் இருப்பது! பழைய சமயக்கொடியோ?
நோரோன் பழையசமயத்தில்"அம்மா"எனும் அம்மம்மா,சிவ்,வேல்,அக்னி,சித்தர் என பலர்!
வச்சுக்கோ!என நாம்கூறுவதுபோல் வசகு!என்பர்! பசுவை நாம் "கோ" என அவர் "கு" என்பர்!
"சம" என்பது அதேபோல,ஒத்த எனும் கருத்தில் வருவதும் ஆச்சரியம் அன்றோ!
அரசனை "கொங்கன்" என்பர்!ஊர்மக்களை "ஊர்பிபோல்க்னிங்"என்பர்!ஊர் எனில் பழமை!
"அ" எனும் தமிழ் முதல்எழுத்தின் உச்சரிப்பும்,வடிவமும் அப்படியே இவர்மொழியில்!
சமஸ்கிருதமே லத்தின்,கிரேக்கம்,இந்தியின் தாய் எனில்,தமிழ் தந்தையோ?ஆய்வோமா!
"கெல்ல ரிச்ட்னிங்கர்" எனும் கல்லோவியங்கள் பாய்க்கப்பல்,மனிதர்,மிருகம்,பறவை,மீன்
ஆயுதம்,கருவி,குறியீடுகள்,அத்துடன் மலைகல்லில்குடைந்த வட்டகுழிகள் கோப்பைகளாக!
ஆயிரமாண்டுமுன் கிறித்தவம்வரமுன் பழைய"நோரோன்சமயம்"தமிழர்சமயமோ!ஆய்வோமா!
நல்லையா சண்முகப்பிரபு, பி.எஸ்சி,
பத்திரிகைத்துறை டிப்ளோமா(லண்டன்),
ஆசிரியபயிற்சி(நோர்வே)
http ://sarvadesatamilercenter .blogspot .com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment