சங்கத்தமிழ் அனைத்தும் தா! - நல்லையா சண்முகப்பிரபு-நோர்வே
எங்கள் தமிழ்மொழி, எங்கும் பரந்தது! என்றென்றும் வாழ்ந்திடுமே! எம்மினம் உயர்ந்திடுமே!
சங்கம்அமைத்தும்,கோவில்கள்அமைத்தும்,நம்மவர் கூடுகின்றார்! நம்தமிழில் பேசுகின்றார்!
தங்கஉயர்குணம், தக்கபுலமையும்!அன்புடன் பண்புடனே! அனைவரும் கூடிஆடிப் பாடுகின்றார்!
எங்கும்புகுந்தார்!எவரையும்வென்றார்!எதற்கும்அஞ்சார்!பேச்சிலும் வல்லர்!செயலிலும் வல்லர்!
எவர்க்கும் இரங்குவர்! எங்கும் பழிசெய்யார்!எம்மவர் உயர்வுற உழைத்திடுவர்!
கண்ணீரை உகுத்திடுவர்!
அவர்கள் அழித்திட ஓடியநம்மவர்,உதவிசெய்திட உள்ளவர் யாரென?
திக்குற்றுநின்று திகைத்தனர்!
இவர்கள் எம்மவர்,உதவுவர்!என்றென்றும் நம்பினர்!நாடினர்!
நாம் ஒரேமக்கள்,ஒரே மொழி வாழியவே !
தவறுகள்,தப்புகள் இளசுகள்செய்திட,நம்மவர்ஒற்றுமை குலைந்தது!
வீரமும் தியாகமும் வீழ்ந்ததுவே!!
புலம்பெயர் தமிழர் புகுந்தநாட்டிலும் சாதனை பல புரிந்தார்!
பன்மொழி பயின்று! பலதொழில் செய்து!
பலம் பல பெற்று! பிள்ளைகள் யாவரும் பல்துறை சட்டம்,
மருத்துவம்,பொறியியல் கல்விபயின்று
தலம்,தளம் அமைத்து தானங்கள் புரிந்து தம்மையும் உயர்த்தி
தம் உறவினர்,நண்பர்,பிறரை உயர்த்தினர்!
சிலம்புதந்த எம்செந்தமிழ்நாடு! சிந்தனைசிறக்கும் ஈழதமிழ்நாடு!
சிறப்புறவாழும் தமிழர்உலகு வாழியவே!
இலக்கியம்,கலைகள் யாவும்போற்றி இன்பம்காண்கிறார்!
இனியதமிழை பேசிப்பேசி மகிழ்வுகாண்கிறார்!
இலக்குநோக்கி மெல்லமெல்ல நகர்ந்துசெல்கிறார்!
புதியபாதைநோக்கி அவர் சேர்ந்துசெல்கிறார்!வெல்வார்!
விலக்கிவைத்து எவர்மனமும் புண்படுத்திடமாட்டார்!
வில்லங்கம் தேடிவந்தால் விட்டு ஓடிடமாட்டார்!
துலக்கிவைத்த விளக்குபோல மினுமினுப்பாரே!துன்பம்வந்தால்
துடித்தெழுந்துபோரிடுவாரே!வென்றிடுவாரே!
அப்பாதந்த அறிவுரையைக் கேட்டிருப்பாரே!அம்மாதந்தபாசத்திலே திளைத்திருப்பாரே!அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை
அப்பப்பா,அப்பம்மா,அம்மம்மா,அம்மப்பா,மாமா,மாமி
உறவு முறை போற்றி நிற்பாரே! இரு கண்கள் கலங்கி நிற்பாரே!
தப்பாது தமிழ்படங்கள் பார்த்திருப்பாரே! தமிழ்பாடல் கேட்டுகேட்டு இன்புறுவாரே!
தமிழ் உணவு நாக்குச்சுவை ஏங்கிநிற்பாரே!
எப்போதும் எம்நாட்டின் நிலை அறிவாரே!எம்மவரின் துயர்கண்டு துடிதுடிப்பாரே!
உலகெங்கும் முறையிட்டு நீதி கேட்பாரே!
கல்வித்தமிழ் தந்தாய்!கருத்தாய் கற்றோம்!இயல்தமிழ் தந்தாய்!இலக்கியம் செய்தோம்!இசைத்தமிழ் தந்தாய்!இனிக்க பாடினோம்!
நல்நாடகத்தமிழ் தந்தாய்!நன்றாகநடித்தோம்!அறிவியல்தமிழ் தந்தாய்!உலகுவியக்க ஆய்ந்தோம்!கணனிதமிழ் தந்தாய்!கடலாயானோம்!
வெல்லும்போர்த்தமிழ் தந்தாய்!புறநானூறு கண்டோம்!
கலைஞரின் அரசியல்தமிழ் கேட்டுவியந்தோம்!சினிமாத்தமிழ் கண்டுமகிழ்ந்தோம்!
நல்லுலகம் வியக்கும் வண்ணம் சாணக்கியதந்திரத்தமிழ் தருவாய்!
நம்மவர் வென்றிட,உயர்ந்திட சங்கத்தமிழ் அனைத்தும்தா தாயே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment