WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, August 6, 2010

சிங்களகுடியேற்றம், தமிழர்வளங்களை சூறையாடல், தமிழர் மனவலிமையினை உடைத்தல், தமிழினஆளணிகளை நலிவடையசெய்தல், இளம்சமுதாயத்தை சீரழித்தல், கலாச்சாரசீரழிவுகள்.!

2010/8/5 Stopp kulturelt folkemord mot tamiler på Sri Lanka
- Show quoted text -

சிங்கள குடியேற்றம், தமிழர் வளங்களை சூறையாடல், தமிழர் மன வலிமையினை உடைத்தல், தமிழின ஆளணிகளை நலிவடைய செய்தல், இளம் சமுதாயத்தை சீரழித்தல், கலாச்சார சீரழிவுகள் ஆகிய உள்ளடங்கலான தமிழர் பொருளாதார, சமூக,குடும்ப, கலாச்சார கட்டமைப்புக்களை சினாபின்னமாக்கும் திட்டங்களை செய்துவருகின்றது.

ஆகவே
சிங்கள அரசின் இந்த தமிழினத்தை வேரோடு அறுக்க தேவையான கால அவகாசத்தை அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைந்து புரிந்து செயற்படவேண்டும். அபிவிருத்தி, புனர்வாழ்வு, நல்லிணக்கம் என்ற பசப்பு வார்த்தைகளுக்குள் வீழ்ந்துவிடாது அத்துடன் தாயகத்தில் தமிழ் மக்களின் நலன்களை தன்முனைப்பாக செய்து கொண்டு தமிழர் போராட்டமும், வேலைத்திட்டங்களும் நகரவேண்டும்.

-----------
கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரச படைகளின் குடியிருப்பு வசதிக்காக அபகரிக்கப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் துரத்தப்படுகின்றனர். மரணத்தின் விழிம்பிலிருந்து மீண்ட மக்கள் கூட்டம் தெருவிற்கு இழுத்துவரப்பட்டு மீண்டும் சூறையாடப்படுகிறது. அவர்கள் மறுபடி துவம்சம் செய்யப்பட்ட பின்னர் இலங்கை அரச ஆதரவாளர்கள் உரக்கச் சொல்வார்கள் “நடந்தது நடந்துவிட்டது, இப்போது மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது அது மட்டும் தான் எமது கடமை, மக்கள் துரத்தப்பட்ட நிகழ்வு குறித்துப் பேச வேண்டாம்” என்று. நாளை எங்காவது ஒரு மூலையில் இன்னும் ஒரு தடவை நச்சு வயுக்களாலோ, பொஸ்பரஸ் குண்டுகளாலோ இல்லை இப்படி ஏதாவது ஒரு உயிர்க் கொல்லியால் அப்பாவிகள் அழிக்கப்படுவார்கள்.அப்போது அவர்கள் மீண்டும் வருவார்கள் அழிவு முடிந்துவிட்டது; இனிமேல் அதைப் பற்றி மூச்சுவிடவேண்டாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதே கடமை என்று இன்னுமொரு தடவை சொல்வார்கள்.
கொல்லப்படுபவர்களைத் தவிர எஞ்சியோரைப் பார்வையிட தமிழக எம்பிக்கள், புலம்பெயர் கனவான்கள், இந்திய சினிமா வியாபாரிகள், முன்னை நாள் புலிகள் என்று ஒரு சக்திமிக்க கூட்டமே புறப்பட்டுவிடும். அவர்கள் மறுபடி மக்கள் கொல்லப்படும் வரை தங்கள் உதவிக்கரங்களை உயர்த்தியபடி காத்திருப்பார்கள்.

------------------

வடக்கில் தமிழரது சனத்தொகை ஆதிக்கத்தை குறைத்தல், தமிழர் தமது தாயகம் எனும் கோட்பாட்டை சிதைத்தல், எப்போதுமே தமிழர்களை ஓர் அச்சுறுத்தலிற்குள் வைத்திருத்தல் போன்ற நீண்ட கால திட்டத்தினை அடிப்படையாக வைத்து முருகண்டியில் திட்டம் மஹிந்தவினால் நன்கு திட்டமிட்டு நடைபெறுகின்றது.
12,000 இராணுவ குடும்பங்களும் அங்கு நிரந்தரமாக இருந்து பணியாற்றுவார்கள் அத்துடன் அவர்களுக்கான சிங்கள பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள்,பெளத்த கோயில் மற்றூம் பல பொது சேவைகள் உட்பட வர்த்தக நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முற்றுமுழுதாக அங்கு மூன்று கிராமங்களில் உள்ள தமிழர்களை விரட்டியடித்துவிட்டு இந்த சிங்கள குடியேற்றம் மஹிந்தவினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இஸ்ரேல் பாலஸ்தீன நிலங்களை அபகரித்து அங்கே யூத குடியிருப்புக்களை அமைப்பது போல மஹிந்த அதே பாணியில் முருகண்டியில் குடியேற்றங்களை நிறூவுவதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த கட்டுரையாளர் மஹிந்தவை எச்சரிப்பது என்னவெனில்
மீண்டும் ஓர் ஆயுதப்போருக்கு மஹிந்த வித்திட்டுள்ளார்.
மீண்டும் ஓர் இனக்கலவரம் ஏற்படுவதற்கு இந்த திட்டம் அடித்தளம் இடுகின்றது.
தெற்கில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் அதனால் வடக்கில் சிங்களவர் வாழ்ந்தால் என்ன என்ற மஹிந்தவின் கேள்வியினை ஏற்க முடியாது. காரணம் தெற்கில் தமிழர்கள் தாமாகவே குடியேறியுள்ளனர். மஹிந்த செய்வதனைப்போன்று அரச ஆதரவுடன் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் ஊடாக அவர்கள் குடியேறவில்லை என்றும் வாதாடியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் 2011 ஆம் ஆண்டிற்குள் முருகண்டி நகர் 75,000 சிங்களவர்களைக்கொண்ட ஓர் சிங்கள நகரமாக காட்சிதரப்போவது உண்மை.

No comments: