WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Monday, November 1, 2010

தமிழினத்திற்கு எந்த ரூபத்திலாவது அவமானம் வந்தால் அதை தட்டிக் கேட்கிற முதல் ஆளாக இருக்கிறார் சீமான். அவருடன் ஒரு சந்திப்பு..!!!

Bas Baskaran


கோஷத்திற்கும் முழக்கத்திற்கும் இருக்கிற வித்தியாசம்தான் சீமானுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இருக்கிற வித்தியாசம். ஈழ விடுதலைக்கான குரல் மட்டுமல்ல, தமிழினத்திற்கு எந்த ரூபத்திலாவது அவமானம் வந்தால் அதை தட்டிக் கேட்கிற முதல் ஆளாக இருக்கிறார் சீமான். அவருடன் ஒரு சந்திப்பு

உங்கள் மாணவர் பருவம் குறித்து?

சிவகங்கை மாவட்டம் அரணியூர்ங்கறது என்னோட ஊரு. என்னுடைய பால்ய பருவமும் அங்குதான். நான் தொடக்கக் கல்வியை அரணியூர்லேயே 5ம் வகுப்பு வரை படித்தேன். 6லிருந்து பத்தாம் வகுப்புவரை புதூர் என்ற ஊரிலே ஹாஜி இப்ராஹிம் பள்ளியில் படித்தேன். பதினொன்று பன்னிரண்டாம் வகுப்புகளை இளையாங்குடி மேல்நிலை பள்ளியில் படிச்சேன். அங்கேயே இளையாங்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிச்சேன். அந்தக் காலக்கட்டங்கள்ல எனக்கு விளையாட்டுல ரொம்ப ஆர்வம். அங்க அதுக்கு திடல் இருந்தது. கபடி ரொம்ப ஆர்வமா விளையாடுவேன். சிலம்பம், கராத்தேவுலயும் ஆர்வம் அதிகம். அவற்றையும் கத்துக்கிட்டேன். கிராமங்கள்ல நடக்கற கரகாட்டம், நாடகம் இதெல்லாம் தொடர்ந்து பார்த்ததும் அந்த கிராமிய கலைகளை வாசிக்க, சுவாசிக்க, நேசிக்க ஒரு கலை ஆர்வம் பற்றிக்கொண்டது.

என்னோட நண்பர்கள் பேராசிரியர்கள் ஊக்கப்படுத்தியதால் திரைத்துறைக் கலைஞனா புகழ்பெறனும்னு ஆசை வந்தது. தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற மாபெரும் தலைவர்களின் தத்துவ சிந்தனையெல்லாம் என்னை ஈர்த்தன. அதே நேரம் அந்தப் பக்கம் நடந்த சாதிய ஒடுக்குமுறைகளையெல்லாம் பார்த்து, மதம் எப்படி மானுட சமூகத்தையெல்லாம் பிளந்து போடுவதென்பதை பார்த்து, ஒரு மாற்றத்தை விரும்புகிற பிள்ளையாக நேசத்தை விரும்புகிற பற்றாளனாக மாறத் தொடங்கினேன்.

அடிப்படையில் நான் தமிழனாக இருக்கும்போது தாய்ப்பாசம் எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக இருக்குமோ அப்படியே மொழி, இனப் பற்றும் எனக்கும் வந்தது. சென்னைக்கு வந்து அய்யா நெடுமாறன், தலைவர் வீரமணி, அண்ணன் அறிவுமதி, அண்ணன் சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, தோழர் தியாகு போன்ற இன உணர்வு கொண்டவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பல்வேறு இளைஞர்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக இருக்கக்கூடிய பெரியார் திடலுக்கும் சென்று அங்கே உள்ள நூல்களையெல்லாம் வாசிக்க, என்னோட பார்வை விரிய ஆரம்பிச்சது.

அந்தக் காலக்கட்டத்தில் தன் தேச விடுதலைக்காக அண்ணன் பிரபாகரன் அவர்கள் அந்த மண்ணில் வீரம் செறிந்த அறப்போரினை நிகழ்த்திக் கொண்டிருந்தார். ஒரே தமிழ் ரத்தத்தில் பிறந்த பிள்ளைகள் என்பதால் அவரை நேசிக்கத் தொடங்கி, தமிழ் தேசிய விடுதலைக்கான போரை ஆதரிக்கத் தொடங்கினேன். இதில் என்னை முழுக்க முழுக்க ஐக்கியப்படுத்திக்கொண்டு செயல்பட்டேன். கலைத்து¬யின் வருமானத்தைவிட என் இனமானம் பெரிது என்ற நோக்கிலே நான் போராடத் தொடங்கினேன். இதில் நான் சந்தித்த இடையூறுகள், வழக்குகள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம செத்தாலும் நம்ம இனம் வாழ்ந்தாபோதும் என்று பயணித்தேன். அந்த பயணத்தின் தொடர்ச்சிதான் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஈழத்திற்காக குரல் கொடுத்த வைகோ, திருமா போன்றவர்களே கூட்டணி அரசியலில் சிக்குண்ட பிறகு நாம் தமிழர் இயக்கம் மட்டும் என்ன செய்து விட முடியும்?

எங்க அண்ணனுங்க செய்த பிழையை நான் செய்ய மாட்டேன். என்னால இந்த அரசியலில் ஈடுபட முடியல. பல தலைவர்களின் விரலைச் சூப்பிக் கொண்டு திரிந்த ஒரு பாசமான நாய்க்குட்டியாகத்தான் நான் இருந்தேன். என்னுடைய வருத்தம் என்னவென்றால் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வலிமையைக் காட்ட மாநாடு கூட்டறாங்க. தங்கள் கட்சித் தொண்டர்களின் மொத்த வலிமையைக் காட்டறாங்க. ஆனா அங்கே போரை நிறுத்த இங்கே எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சித் தொண்டர்களின் மொத்த வலிமையைக் கூட்டி ஒரு போராட்டம் நடத்தல. இந்த வருத்தம் இன்னைக்கு மட்டுமில்ல, எனக்கு என்னைக்கும் ஆறாது.

இதைத்தான் ஈழத்தில் அண்ணன் பிரபாகரன் என்னிடம் ‘‘குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரைக் கூடவா திரட்டி உங்களால் போராட்டம் நடத்த முடியாது?’’ என்று கேட்டார்.

அவர் மனதில் எந்த அளவுக்கு ஆதங்கம் இருந்திருந்தால் ஒரு சிறியவன் என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் இன்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை நான் திரட்டியிருக்கிறேன். எங்களால் இங்குள்ள எந்த கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்ற முடியாது. நாங்க சாதி, மதம் கடந்த தமிழ்த் தேசியத்தின் பிள்ளைகள். இதை செய்வதற்கு வானத்திலிருந்து ஒரு தலைவர் வருவார்னு நாம காத்திருக்க முடியாது. திரைத் துறையிலிருந்து ஒரு தலைவர் வந்து குதிப்பார்னும் காத்திருக்க முடியாது.

வலிமையில்லாத ஏழை பாமரன் வீட்டுப் பிள்ளையா நாங்க வந்திருந்தா கூட இன உணர்வு என்ற ஒரு பெரிய வலிமை எங்ககிட்ட இருக்கு. நான் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் தேசியத்திற்காக குரல்கொடுத்திருக்கிறேன். என் பால் ஈர்க்கப்பட்ட தம்பிமார்கள் இன்று என் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.

இறுதிக்கட்ட போர்க்காலத்தில் ஏதாவது செய்தாக வேண்டும் என்று என்னிடம் ஏராளமான தம்பிமார்கள் அழுதிருக்கிறார்கள். அப்படி ஏதாவது செய்ய வேண்டுமானால் நமக்கு வலிமை வேண்டும். அந்த வலிமை நமக்கு இருக்கிறதா என்றால் இருக்கிறது. தம்பி முத்துக்குமார் உயிரோடு இருந்தபோது அவரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் இன்னுயிரை ஈந்த பிறகு இந்த உலகில் அவரை அறியாதவர்களே இல்லை. அவர் இறுதி ஊர்வலத்தில் திரண்ட 2 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் ஏன் எந்த இயக்கத்திற்கும் போகவில்லை? நான் கலைத்துறையில் சிறியவன். என்னைவிட வலிமையானவர்கள் பின்னால் கூட ஏன் அவர்கள் அணிதிரளவில்லை?

‘‘நாம் தமிழர்’’ கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் கூடுகிறார்கள் என்றால் மாற்றத்தை விரும்பும் இந்த இளைஞர்களுக்கு என் முன்னோர்கள் ஏன் எந்த மாற்று வழியையும் உண்டாக்கவில்லை? நான் இந்த இயக்கம் தொடங்கவில்லை என்றால் எப்படி பல தலைவர்களையும் நம்பி நாதியற்று திரிந்தேனோ அதேபோல இவர்களும் திரிந்திருப்பார்கள்.

எனது பார்வையில் ஈழ விடுதலை என்பது நம் மக்களுக்கு மட்டுமான விடுதலை அல்ல. ஒட்டுமொத்த உலக தமிழர்களுக்கான விடுதலை.

ஒரு நாட்டை அடைந்து விட்டால் பொருளாதார விடுதலை. பெண்ணிய முன்னேற்றம் அனைத்தும் நமக்கு எளிதாக கிடைத்துவிடும். முதலில் ஈழத்தில் சாதி, மதம் ஒழிக்கப்பட்டிருந்தது. ஈழத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை இருந்தது. தமிழனுக்கான சட்டம், தமிழனுக்கான பாடத்திட்டம் எல்லாமே இருந்தது, இதை எவரும் மறுக்க முடியாது. எந்த நொடியிலும் அழித்தொழிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தபோதும் எம்மக்கள் சுதந்திரமாக இருந்தார்கள். அதேபோல திருடன், பிச்சைக்காரன் இல்லாத நாடாகவும் இது இருந்தது.

No comments: