WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Monday, November 1, 2010

தமிழ்ப் பெண்களின் பரிதாப நிலை தொடர்கின்றது.....அனலை நிதிஸ் ச. குமாரன்

தமிழ்ப் பெண்களின் பரிதாப நிலை தொடர்கின்றது.....அனலை நிதிஸ் ச. குமாரன்

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை புலிகளிடம் இருந்து விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக தம்பட்டம் அடித்து உலக நாடுகளிடம் இருந்து ஆதரவைப் பெற பல பிரயத்தனங்களை எடுக்கின்றது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்விலோ குறிப்பாக தமிழ் பெண்களின் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. மாறாக தமிழ் பெண்கள் போர்க் காலத்தில் எவ்வாறு துன்பங்களை அனுபவித்தார்களோ, அதைவிட பல மடங்கான பிரச்சினைகளை இன்று அனுபவிக்கின்றார்கள். இவைகள் அனைத்தையும் சிறிலங்கா இராணுவமும், அதனுடன் இயங்கும் கூட்டுக்குளுக்களுமே செய்கின்றன. கற்பலிப்புக்களும், கடத்தல்களும், கப்பம் பெறுவதுமாக நிகழ்வுகள் தொடர்கதையாக உள்ளது.
எப்போ தணியும் எங்கள் தாகம் என்று ஏங்கித்தவிர்த்த தமிழருக்கு, மே 2009-க்கு பிறகு சோதனைகள் பல மடங்காக அதிகரித்தது. பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த வேலையில் பல லட்சம் மக்கள் நெஞ்சை நிமிர்த்தி நடந்தார்கள். கொடுமையிலும் கொடுமையான சம்பவங்களை கடந்தவருடத்தில் இருந்து தமிழ் மக்கள் அனுபவிக்கின்றார்கள். பல்லாயிரம் புலம்பெயர் தமிழர்கள் நாடு சென்று திரும்பி ஏதோ ஈழத்தில் சுமூக வாழ்வு திரும்பிவிட்டதாக கூறினாலும், நிலைமை படுமோசமாக உள்ளது என்பது தான் உண்மை.
வீட்டுக்குள் நடக்கும் கூத்துக்கள் வெளியில் தெரியாமலே பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. கலாச்சார சீரழிவான பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதை தாயகம் சென்று திரும்பும் பலர் கூறுகின்றார்கள். உற்றார் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து சம்பாதித்து அனுப்பும் பணத்தில் வாழ்க்கை நடத்தும் பலருக்கு பொருளாதார ரீதியில் பிரச்சனை இல்லையென்றாலும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தாராளமாகவே கலாச்சார சீர்கேடுகளில் ஈடுபடுகின்றார்கள். ஆயுத மோதல்கள் இல்லாத காரணத்தினால் பல இளைஞர்கள் நள்ளிரவு தாண்டியும் வீடு திரும்பாமல் களியாட்டங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இவைகள் அனைத்திற்கும் சிறிலங்கா இராணுவத்தினரும், ஒட்டுக்குழுக்களும் ஒத்தாசை வழங்குவது மட்டுமின்றி உக்கிவித்தும் வருகின்றார்கள்.
புலிகளுக்கு பயம் இருந்தவேளையில் அடங்கி ஒதுங்கிருந்த பலர் இன்று சுதந்திரமாக கலாச்சார சீரழிவு சம்பவங்களை செய்கின்றார்கள். இதைத்தான் சிறிலங்காவின் அரசு தமிழர்களுக்கு புலிகளிடம் இருந்து விடுதலை பெற்றுத்தந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கின்றது போலும்.
பெண்கள் பல இன்னல்களை சந்திக்கின்றார்கள்கடந்த செப்டம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஒரு அறிவிப்பை அறிவித்தது. இவ்வறிவிப்பானது, பல தமிழர்களையும் மற்றும் பெண்கள் சார்பான அமைப்புக்களையும் வியப்புக்கு உள்ளாக்கியது. அதன் அறிவிப்பின் படி வடக்கிலும் கிழக்கிலும் 89 ஆயிரம் கணவர்மாரை இழந்த பெண்கள் வசிப்பதாக கூறியது. யுத்தம் நடைபெற்ற வேளையில் ஏதோ இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் பெண்களே இப்படியாக இருக்கின்றார்கள் என்று பலர் கருதினார்கள். ஆனால், சிறிலங்காவின் இவ்வறிவிப்பு பலரை அச்சமடையச் செய்தது.
சிறிலங்காவின் மகளிர் விவகார பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் இதுகுறித்து தெரிவிக்கையில், கிழக்கில் 49 ஆயிரம் பெண்களும் மற்றும் வடக்கில் 40 ஆயிரம் பெண்கள் கணவர்மாரை இழந்துள்ளனர் என கூறினார். இவர்களில் எட்டாயிரம் பேருக்கு குறைந்தது 3 குழந்தைகளாவது உள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர் இவர்களுக்கான உதவி திட்டங்களுக்காக இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே பல இன்னல்களை சந்திக்கும் கணவன்மாரை இழந்து குடும்பத்தை நடாத்தும் பெண்கள், சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் இயங்கும் ஒட்டுக்குழுக்களால் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். குடும்பத்தை நடாத்த போராடும் இப்பெண்களுக்கு தாம் ஏதோ பொருளாதார உதவி அளிப்பதாக கூறி இவர்களை கலாச்சார சீரழிவான நிகழ்ச்சிகளை நடாத்த துன்புறுத்துவதுடன், பல நெருக்கடிகளையும் கொடுத்து சிங்கள மயமாக்கும் மகிந்தாவின் திட்டத்துக்கு இவர்களை பாவிக்கின்றார்கள்.
இராணுவத்தினர் பல பெண்களுடன் தகாத உறவுகளை வைத்து அவர்களினூடாக குழந்தைகளை பிரசவிக்கும் நிலைமை நடைபெறுகின்றது. பெற்ற குழந்தைகளையே குப்பைத் தொட்டிகளிலும் மற்றும் கிணற்றுக்குள்ளும் வீசிவிட்டு போகும் நிலை இன்று பரவலாக தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்றது என்பதை அறியும்பொழுது தமிழர்களின் கலாச்சார நிகழ்வுகள் எந்தளவில் இருக்கின்றதை உணரமுடியும்.
சிறிலங்கா இராணுவத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ஒட்டுக்குழுக்களாலும் பல கலாச்சார சீர்கேடான நிகழ்வுகளை செய்கின்றார்கள். குறிப்பாக கற்பளிப்புக்கள், போதைவஸ்துக்கு அடிமையாக்குதல் மற்றும் இழிவான படங்களை தயாரித்து சந்திக்குச் சந்தி வைத்து அவைகளை விற்று இளையோர்களை பாழாக்கும் செயலில் ஈடுபடுத்துகின்றார்கள். பல பெண்கள் தனியாக இருக்கும்போது நள்ளிரவில் வீடுகள் சென்று பெண்களை துன்புறுத்தும் நிகழ்வுகள் பரவலாக நடைபெறுகின்றன. இப்படியாக பல சம்பவங்கள் நடைபெறுகின்ற போதிலும் இவைகளில் பல இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
பயிரைப் பாதுகாப்பதாக சொல்லுபவர்களே அழிக்கின்றார்கள்தாம் ஏதோ தமிழர்களின் பாதுகாவலர்களாக இருப்பதாகக்கூறும் சிறிலங்கா அரச படையினர் பெண்களின் பாதுக்காப்பில் அச்சுறுத்தலாகவே இருக்கின்றார்கள். பயங்கரவாதிகள் மீண்டும் தலை தூக்க விடாமல் இருக்க ஒரே வழி இராணுவத்தினரின் அரண்களை பலப்படுத்த வேண்டும் என்ற தோரணையில் செயலாற்றும் சிறிலங்கா, பாதுகாப்புப் படையினரினாலேயே பல அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன என்பதை மூடிமறைக்க பார்க்கின்றது. மன்னிக்கவும்...பசில் ராஜபக்சாவின் வேண்டுதலின் பெயரிலேயே தமிழரின் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகளை பாதுகாப்புப் படையினர் என்று சொல்லும் இவ் அரச பயங்கரவாதிகள் செய்கின்றார்கள்.
தமிழர் தேசத்திலிருந்து வரும் செய்திகள் மனதை பிளக்கின்றனவையாக இருக்கின்றது. கடந்த மாதம் வன்னியில் பாடசாலை சென்றுவிட்டு பேரூந்தில் வீட்டிற்கு பயணம் செய்துகொண்டிருந்த மாணவியை பேரூந்தில் வைத்து இராணுவத்தினர் அங்க சேஷ்டை செய்துள்ளனர். முறிப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேரூந்தில் மொத்தம் 4 பேரே அந்தவேளை பயணித்துள்ளனர். இதில் ஒரு இராணுவ சிப்பாயும் அடங்கும். மீதமுள்ள இரு இளைஞர்களும் அச்சத்தால் ஒதுங்கிக்கொண்டதால், பேரூந்தில் மாணவியின் நெஞ்சுப்பகுதியோடு அங்க சேஷ்டை செய்தது போதாது என்று அம் மாணவி அணிந்திருந்த அதற்கான உள்ளாடையையும் உருவி வெளியே எறிந்துள்ளான் சிங்கள இராணுவ சிப்பாய்.
மாணவியின் கதறலையும், நிலையையும் புரிந்துகொண்ட ஓட்டுனர், பேரூந்தை அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு ஓட்டிச்சென்று அங்குள்ள உயரதிகாரியிடம் முறையிட்டுள்ளார். சாட்சிகள் ஏதும் உண்டா என உயரதிகாரி கேட்க, அதில் பயணித்த இரு இளைஞர்களும், தாம் கண்டதைக் கூறியும், உங்களை துப்பாக்கியால் சுடுவேன் என அந்த அதிகாரி மிரட்டி, தாக்கியும் உள்ளார்.

No comments: