WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, July 10, 2011

பின்லாந்தைச்சேர்ந்த 25 வயதான லாரா புக்கோ என்ற பெண் கேரளாவில் யானைப்பாகனாக வேண்டும் என்று பயிற்சிஎடுத்து வருகிறார்.!!!


09 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 14:51 ஜிஎம்டி

யானைப் பாகன் பயிற்சியில் பின்லாந்துப் பெண்

பின்லாந்தைச் சேர்ந்த 25 வயதான லாரா புக்கோ என்ற பெண் கேரளாவில் யானைப் பாகனாக வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருகிறார்.

பயிற்சியில் லாரா புக்கோ

யானைப் பாகனாகும் பெண்

கேரளாவின் குமுளியில் பயிற்சி எடுத்து வரும் இவர் ஹோமியோபதி மருத்துவம் படிப்பவர். கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்த போது தான் இவர் முதல் முறையாக யானையை நேரில் பார்த்துள்ளார். அது கண்டதும் காதலாகிவிட்டது.

தான் முதலில் யானையோடு நடந்து செல்வது, அதற்கு உணவு ஊட்டுவது போன்ற செயல்களை செய்ததாகவும் பிறகு ஆசை அதிகரிக்க படிப்படியாக பாகன் வேலைக்குத் தேவையான பயிற்சிகளை எடுக்க ஆரம்பித்ததாகவும் கூறுகிறார் லாரா.

தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளுக்கு யானை சவாரி வசதி அளிக்கும் எலிபென்ட் ஜங்க்ஷ்ன் என்ற நிறுவனத்தில் தான் இவர் பாகன் பயிற்சி பெறுகிறார். கடந்த ஆண்டும் இந்த முறை கோடை காலத்தில் இங்கு வந்த போதும் பெண் யானைகளை கையாண்ட இவர், அடுத்த முறை டிசம்பரில் வரும் போது தந்தம் கொண்ட ஆண் யானைகளை முதல் முறையாக கையாளுவார்.

"கடந்த முறை இங்கே மூன்று மாதங்கள் தங்கினேன். பல விடயங்களை கற்க ஆரம்பித்தேன். காலையில் சீக்கிரம் வந்துவிடுவேன் மாலை மிகவும் நேரம் கழித்துதான் செல்வேன். முழு நேரமும் யானைகளுடன் தான் கழிப்பேன்." என்கிறார் லாரா

பயிற்சியில் இவர் அதிக ஆர்வம் காட்டுவதாக எலிபெண்ட் ஜங்க்ஷன் நிறுவனத்தின் மேலாளர் ஷாஜி நாயர் நம்மிடம் தெரிவித்தார். அதே நேரம் மொழிப் பிரச்சனையில் இவரின் பயிற்சியின் வேகம் குறைவதாகவும் அவர் கூறினார்.

அதாவது அங்குள்ள பிற பாகன்களுக்கு மலையாளத்தைத் தவிற பிற மொழிகள் தெரியததால் தொடர்பாடலில் பிரச்சனை நிலவுகிறது.


லாரா புக்கோ
தான் மலையாளம் கற்றுக் கொள்ள முயன்று வருவாதகக் கூறும் லாரா தன்னால் முழுமையாக அம் மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார். யானையோடு தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் சில கட்டளைகளை தற்போது அவர் கற்றுள்ளார். யானையை கட்டுக்குள் கொண்டுவருவதை விட மலையாளம் கற்பது கடினமாக இருக்கிறது என்கிறார்..

கேரளாவில் யானைகளுக்கு ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி முறையில்தான் சிகிச்சை அளிக்கப்படுவதால் தான் படித்த ஹோமியோபதி படிப்பும் தனது வருங்கால வாழக்கைக்கு கை கொடுக்கும் என்று லாரா நம்புகிறார். பாகனாவோருவருக்கு நாளோன்றுக்கு 400 ரூபாய் அளவுக்குத்தான் கூலு கிடைக்கும். ஆனால்- காசு பெரிதில்லை நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்கு என்கிறார் அவர்.

நான்கு வார கால பயிற்சிக்குப் பிறகு சில தினங்கள் முன்பு மீண்டும் பின்லாந்து திரும்புயிள்ள லாரா தனது எதிர்காலம் குமுளில் தான் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

"குமுளியோடு இணைந்து இருக்க வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். இங்குள்ள யானைகளை மட்டுமல்ல, இந்த மக்களையும் நகரின் சூழ் நிலையும் எனக்கு பிடித்துவிட்டது.. இங்கே எனக்கு எதிர்காலம் இருக்கிறது என்று நான் உணர்கிறேன்.. சொந்தமாக யானையை வைத்திருக்க முடிந்தால் அது நிச்சயம் கனவு நனவான நாளாகவே எனக்கு இருக்கும்."
என்றார் லாரா புக்கோ.

வழமையாக ஆண்கள் தான் பாகன் வேலைக்கு செல்பார்கள். யானைக்கும் பாகனுக்குமான உறவு பல தசாப்தங்கள் நீடித்து நிற்கக் கூடியது. ஆனால் இந்த உறவில் சமீப காலங்களில் விரிசல்கள் தோன்றியுள்ளன. யானைகள் தமது பாகனை மிதித்துக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சில ஆபத்துக்கள் இருந்தாலும் தனக்கு குறையாத ஆர்வம் இருப்பதால் பாகன் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து கேரளாவின் முதல் பெண் பாகனாகமுடியும் என்று நம்புகிறார் லாரா புக்கோ.


BBC.CO.UK/TAMIL

No comments: