Thursday, August 4, 2011
வைகோ:ஏற்கெனவே சீனா இலங்கையுடன் நெருக்கமாகஇருப்பதாகவும், சீனா,பாகிஸ்தானுக்குத்தான் இலங்கை விசுவாசமாகஇருக்குமேஒழிய இந்தியாவுக்கு விசுவாசமாகஇருக்காது.!!!
03 ஆகஸ்ட், 2011 - பிரசுர நேரம் 17:39 ஜிஎம்டி
மன்மோகன் சிங்கை வைகோ சந்தித்தார்
'உறவுகள் தொடரும்' - மன்மோகன் சிங்
இலங்கையுடன் இந்தியா ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் வர்த்தக, பொருளாதார ஒப்பந்தங்களை ரத்து செய்வது சாத்தியமில்லை என்பதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலர் வைகோவிடம் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கைச் நேற்று செவ்வாய்க்கிழமை, சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும் வேறுபல பிரச்சினைகள் தொடர்பாகவும் மனுக் கொடுத்தார் வைகோ.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா துரோகம் செய்துவிட்டதாகவும் இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டிய வைகோ, இலங்கையுடன் செய்துகொண்ட வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியதாகத் பிபிசி தமிழோசையிடம் கருத்துத் வைகோ தெரிவித்தார்.
சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலை
ஆனால் இந்தியா அவ்வாறு செய்தால், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்று மன்மோகன் சிங் கூறியதாக வைகோ தெரிவித்தார். ஆனால், ஏற்கெனவே சீனா இலங்கையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்குத்தான் இலங்கை விசுவாசமாக இருக்குமே ஒழிய இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்காது என்று தான் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.
மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை தொடர்பாக பின்பற்றிய கொள்கைகள் தான் சரியான கொள்கைகள் என்றும், தற்போதைய அரசு பின்பற்றும் கொள்கை இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு்க்கு ஆபத்தாக முடியும் என்று பிரதமரை எச்சரித்ததாகவும் வைகோ தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகளை சானல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிலையில், அதை மையமாக வைத்து, இலங்கைத் தமிழர் பிரச்சினையின் அடிப்படை, உலக நாடுகள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு ஆகிய அம்சங்களுடன் ஆங்கிலத்தில் குறுந்தகடு ஒன்றை டெல்லியில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார் வைகோ.
BBCTAMIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment