WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, January 3, 2012

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?

SENT BY:Bas Baskaran chelvadurai@gmail.com

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..? ~ காணொளிபதிவு செய்த நாள் : 02/01/2012


கொலைவெறிப் பாடல் இசையில் யாழ்ப்பாண கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் காணொளி:
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

http://www.youtube.com/watch?v=FuJPlsDj5fk



பாடல் வரிகள்
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்றா முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆச்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்..
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

வரிகள்: எசு.சே.தாலின்
ஒளிப்பதிவு: வர்ணன் & அமலன்வணக்கம் உறவுகளே இப்பாடல் வெளியிடப்பட்டதன் நோக்கம் தனுஸ் இன் பாடலை எதிர்பதற்காக அல்ல தமிழை மறந்து அல்லது மறந்ததுபோல் நடிப்பவனுக்காக. YouTube

No comments: