WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, February 12, 2012

"வரம்-துருவத்துளிகள்-பரதேசி-திரிபு-எங்கே" : நூல்கள் வெளியீடு!




காரைநகரான் : இரத்தினம் .தியாகலிங்கத்தின்

"வரம்-துருவத்துளிகள்-பரதேசி-திரிபு-எங்கே" : நூல்கள் வெளியீடு!

12 -02 -2012 ஒப்சால் தேவாலயம் மாலை.17.௦௦ ஒஸ்லோ, நோர்வே

வாழ்த்தும்- வரவேற்பும்-அறிமுகமும்! - நல்லையா சண்முகப் பிரபு, திறம்மன்,நோர்வே



காரைநகர் தந்த கவின்மிகு எழுத்தாளன்:இ.தியாகலிங்கம்! பல்லாண்டு பல்லாண்டு நீடு வாழ்க!

செந்தமிழே! என் தமிழே!தேனாகித் தெவிட்டாத பைந்தமிழே! நீ நீடு வாழி! பல்லாண்டு நீடு வாழ்க!வளர்க!

ஐந்துகரத்து ஆனைமுகனைப் பணிந்து எந்தமிழால் உன்னை வாழ்த்தி போற்றுகிறேன்! என் தமிழே வாழி!

இந்த உலகில் முதல் பிறந்து,முதல் மொழியாகி,உலகெங்கும் மானிடம் பரவவழிவகுத்த எந்தமிழர் நீடு வாழி!

இந்தியாவின் முதல்மொழி!மண்ணின் மொழி!சிவனால் கூறப்பட்டு அகத்தியன் போதித்த மூத்தமொழி,மூத்தகுடிவாழி!!


இலங்கை எனும் ஈழத்திலே, வடக்கே யாழ்ப்பாணம்!அருகே முத்துசிதறல் போல் அழகழகாய் பச்சை பசேல் தீவுகள்!

சலங்கை கொஞ்சும் நடனம்,தேன்கசியும் இலக்கியம்,பக்திபாடல்கள்,தென்றலாக தமிழ்,பக்திப்பரவசமாய் சிவத்தலங்கள்!

கல்வி,விவசாயம்,வர்த்தகமும்,தொழில்துறையும்,மானம்,வீரம்,கொடை,இரக்கசிந்தையுடன் "காரைநகர்" எனும் அழகுத்தீவு!

எல்லையற்ற மகிழ்வுடனும்,அமைதியான வாழ்வுடனும்,செல்வசெழிப்புடனும் வாழ்ந்த மக்கள் போரினால் சிதறுண்டார்!


வடஅமரிக்கா,ஐரோப்பா,அரபுநாடு,இந்தியா,ஆஸ்திரேலியாவென எம்மவர் புலம்பெயர்ந்தார்! ஆனால் தமிழ் மறந்தாரில்லை!

படபடென தொழில் பெற்றும்,மனைவி,மக்கள் தருவித்தும்,வீடும்,காருமென காலூன்றி,புலர்நிலத்தில் தமிழ்ப்பள்ளிகளும் தொடக்கி,

கடமையிலும்,கண்ணியமாய்,கட்டுப்பாடு போற்றி குடும்பம் காத்தார்!மானம் காத்தார்!இனசனம் காத்தார்!நம்சமயம்,மொழி காத்தார்!

அடடா கோவில்களும் அமைத்து தமிழர் கலை,கலாசார சங்கங்கள் அமைத்து,பலரும் போற்றிட உயர்வுற்றார்!உலகமதிப்பும் பெற்றார்!



காரைநகர் தந்த தங்கம்! ரத்தினம் தியாகலிங்கம்! வந்தடைந்த நாடு நோர்வேயின் வடதுருவம்! வார்டோவில் 87ல் காலூன்றி!

பாரியார்,பிள்ளைகளுடன் 96ல் ஒஸ்லோவில் கால்பதித்தார்! கணணியியல் கற்று உயர்பதவி பெற்றாலும்!தமிழே மோகம்!ராகம்!

காரைநகரான் எனும் பெயரில் கதைகள்,கவிதை,நாவல் என எழுத்திலே தீராத ஆர்வம்!திகட்டாத மோகம்! எழுதிக் குவித்தார்!

பேராளர் எஸ்.பொ.வும்,மித்ரா-பதிப்பகமும் உறுதுணையாய் விளங்கி இவர் நூல்கள் அச்சேற்றி உலகறியச்செய்திட்டார்! அவர் புகழ் வாழி!


"பனிப்பூக்கள்"எனும் நாவலினை,முதன்முதலாய் "சர்வதேசதமிழர்" சஞ்சிகையில் வெளியிட்டு நான் புகழ,தியாகலிங்கம் மகிழ்வுற்றார்!

கனிவான பேச்சும்,அமைதியான போக்கும்!இவருள்ளே இத்துணை எழுத்தாற்றலா!எங்கிருந்து வருகிறது இந்த தமிழ் அருவி,காட்டாறு!

இனிய உரை நடையும்! இலகு செழுந்தமிழும்,எனைமட்டுமன்றி,தமிழ் உலகையே கவர்ந்திழுக்கும்!சமூகநோக்கும்,அவதானமும் அற்புதம்!

பானைசோற்றுக்கு ஒருஅரிசி பதம்போல, இவரின் "வரம்" குறுநாவல்!திறமைக்கு உதாரணமே!சமூக பிரச்சினையை புடம் போட்டுவிட்டாரே!


விளையாட்டு:சூதாட்டம் பற்றி,வரம்:கருணைகொலை பற்றி,மாசு:சூழல்மாசாதல்,ஊதாரித்தனம் பற்றி,முடங்கல்:உடல்-உள்ள ஊனங்குறித்தும்!

புலம்பெயர் தமிழர் பலம்-பலவீனங்கள்!தவறுகள்!குற்றம் குறைகளுடன்!நன்மை-தீமைகளுடன்!அறிவுரையும்!ஆலோசனையும் கூறல் சிறப்பு!

பலம்பெற்று,குறைநீக்கி தமிழரெலாம்,உளவலிமை பெற்று, நிறைவு பெற்று பெருவாழ்வு வாழ!இவர் ஆக்கம் வழிகாட்டும்!காலக்கண்ணாடிபோல்!

புலம்பெயர்ந்தோர்,நாட்டிலுள்ளோர் இவர்போல தம் அனுபவப்பதிவுகளை!அவதானங்களை!உணர்வுகளை!மனிதர் குறைநிறைவை பதிந்திடுக!


கதாசிரியனாய்,கவிஞனாய்,நல்ல குடும்பத்தலைவனாய்!நல்ல நண்பனாய்! கல்வியிலும்,கேள்விஞானத்திலும் வல்லவனாய் விளங்கும் நீர்!

மதங்கள்,இனங்கள்,மொழிகள்,எல்லைகள் கடந்த எழுத்தாளனாய் பல்துறை விடயங்கள், பலவிதகருக்கள்,பலவிதகோணங்களில் எழுதிடுக!

எதைஎழுதினும் உண்மை எழுதுக! அஞ்சாது எழுதுக! உரத்து எழுதுக! உறைக்க எழுதுக!நாவில் சரஸ்வதியும்!கரத்தில் விநாயகரும் அமர்ந்திடுக!

பதைத்திடுமுலகில்! படைப்பவர்சிலரே!படைப்புகள் காலச்சிலைகளே!பின்னோர்வந்துவியப்பதுமிதுவே!சகலரும்படைப்பீர்! தியாகுவை போலே!

2 comments:

Latest Tamil Cinema News said...

Nice

இ.தியாகலிங்கம் said...

அன்னைத் தமிழின் ஆசியுடன் ஆயிரம் நன்றிகள்.