மண்விட்டு வந்தாலும் மறக்காது பண்போடு
புண்பட்ட நினைவோடு பொழுதெல்லாம் கனவோடு
மண்மீது கருத்தோடு உறவுகள் நினைவோடு
தமிழனின் வரலாற்றை வருங்காலம் பறைசாற்ற
நீதிக்குச் செவிசாய்த்து கொடியோர்க்குச் சங்கூதி
உலகத்தின் அரங்கத்தில் குற்றத்தை நிலைநிறுத்தி
வஞ்சத்தால் வன்னிமண்ணில் எம்மவரை கொன்றழித்த
சதிகாரக் கும்பல்களைச் சந்தியில் துகிலுரித்து
தலைகுனிந்த எம்மவரை தலை நிமிரவைத்தவர்க்கும்
ஐ.நா சபை தன்னில் வாக்களித்த நாடுகட்கும்
தவறாது தங்களது ஆதரவை வழங்கினோர்க்கும்
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் சார்பாக
தமிழோடு எந்தன் தலைசாய்த்து வணங்குகிறேன்!
அன்புடன்
சிகாகோ- பாஸ்கரன்
நல்லதை நினையுங்கள்,
நல்லதை செய்யுங்கள்,
நன்றாய் வாழுங்கள்!
No comments:
Post a Comment