மாவீரர்களின் கல்லறைகளில் புத்தபெருமான்! கைகூப்பி வணங்கும் சிங்களம்!!
விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் துயிலும் இல்லங்கை அடியோடு அழித்து அக்கிரமம் செய்யும் இராணுவம் அதில் புத்தர்சிலைகளை வைத்து வணங்கி வருகின்றது.
இந் நிலையில் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமித்து அங்கிருந்து கல்லறைகளும், நினைவுக்கற்களும் அகற்றப்பட்டு பாரிய அளவிலான புத்தர் சிலை அமைக்கப்பட்டு சிலை திறப்பு நிகழ்வு நேற்று பிரமாண்டாக நடைபெற்றிருக்கின்றது.
இதனடிப்படையில் 611 வது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரினாலேயே துயிலும் இல்லக் காணி அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
06 அடி உயரம் உள்ள குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டதுடன், அதே காணியில் பத்திற்கும் மேற்பட்ட கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.
ஆயிரத்து ஐநூறு வரையிலான மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள மாவீரர் இல்லத்தின் நினைவுக்கற்களும், கல்லறைகளும் இராணுவத்தினரால் புள்ளோசர்கள் துணையுடன் இடித்து அகற்றப்பட்டு வேலி ஓரத்தில் அணைபோல குவிக்கப்பட்டிருந்ததாக கண்ணீர் மல்க கவலை வெளியிட்டுள்ளனர் அப் பகுதி மக்கள்.
©2011 www.tamilcnn.com. All Rights Reserved.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment