Saturday, April 28, 2012
50 ம் அகவை நிறைவு செய்யும் திரு . பஞ்சாட்சரம் விஜேந்திரன் நீடு வாழி.!!!
50 ம் அகவை நிறைவு செய்யும் திரு . பஞ்சாட்சரம் விஜேந்திரன் நீடு வாழி.!!!
ஈழத்தின் வளமான இணுவில் கிராமத்து
மேற்கினிலே செகராச சேகரப்பிள்ளையார் ஆலயமாம்!
இனிய சொல்லும், சிரித்தமுகமும்,நகைச்சுவை உணர்வும்
கொண்ட மக்கள்! கூடிப்பகிடி விட்டு!
வேழமுகத்தான் கோவில் வீதியிலே அமர்ந்து
பலகதைகள் பேசி! பரிகாசம் பண்ணி மகிழ்வர்!
விவசாயவேலை முடித்து! மாலை கந்தசாமிகோவில்
முன்னே கைப்பந்தும்,சீட்டும் விளையாடி!
அழகாக தமிழில் இனிய குரல் எடுத்து பக்திப்பாடல்கள்,
பழந்தமிழ் பாடல்கள்,தேவாரம்,திருப்புகழும்
அன்புடனே ரசித்து, அதி உச்சராகத்தில் பாடி
மகிழ்விப்பார்! மற்றவரோ வியந்து நிற்பர்! இரசிப்பர்!
ஈழத்து இயல்,இசையும், அருமையான நாடகமும்
வளர்த்த ஊரில் இவர் தந்தையோ அன்புடையார்!
எங்கு கண்டாலும் எமை அன்புடனே சுகம் கேட்டு!
புன்னகையால் மகிழ்விப்பார் பஞ்சாட்சரம் அண்ணர்!
மகன் விஜேந்திரனோ! நட்புக்கோர் இலக்கணமானவர்!
இளவயதில் நோர்வேவந்து, நல்துணையை கரம்பிடித்து!
நன்மக்கள் தனை பெற்று! நல்லதொரு குடும்பம்!
இனிய பல்கலைக்கழகம்! என்று பலர் போற்ற!
நன்முறையில் வாழ்கின்றார்! நம் விஜேந்திரன்!
கலைகள்,கல்வியுடன்,அன்பும், பண்புமாய்! உற்றார்,
உறவுகள்,நட்புகள்,அயலவரொடு சிறப்பாக நீடு வாழ!
கலைத்தாயாம் சரஸ்வதியும்! விக்கினங்கள் போக்கும்
விநாயகரின் அருளோடு வாழ்த்துகிறேன்!நீடு வாழி! நீடு வாழி!!!
என்றும் அன்புடனும்,பண்புடனும் நீடு வாழ வாழ்த்தும்:
நல்லையா சண்முகப்பிரபு, திறம்மன் , நோர்வே .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment