Saturday, June 16, 2012
பத்தாண்டு காணும் அவ்வை அறிவாலயம்! பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே!
பத்தாண்டு காணும் அவ்வை அறிவாலயம்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே!
எத்தடை வரினும் இப்படை வெல்லும்! என்பதே தமிழரின் நோக்கு!
இத்தனை வருடம் இளையவர் அறிவை,தமிழினை வளர்த்து வந்தீர்!
எத்தனை முயற்சி!எவ்வகை உழைப்பு!அதிபர்!ஆசிரியர்கள்!பெற்றோர்கள்!
அத்தனைபேருடன்,மாணவச் செல்வங்கள்!அருமையாய் உழைத்திட்டீரே!
கற்பவை கற்பீர்!கசடறக் கற்பீர்!எத்துணை தடைவரினும்,காலமெலாம் கற்பீர்!
கற்பதை மற்றவர்க்கு கற்பிப்பீர்!கேட்டவற்றை அறியாதோர்க்கு அறிவிப்பீர்!
கற்பதிலும்,கேட்பதிலும்,சொல்வதிலும் நம்தமிழர் வல்லவர்!உலகம் அறியட்டும்!
பற்பலவிடயம் நம்மொழியில்,கலை,கலாசாரத்தில் உள்ளதை உலகெலாம் உணரவை!
உலகின் மூத்தமொழி!மூத்தகுடி! 60000ஆண்டு பழமையான நிறமூர்த்தம் தமிழரதே!
உலகத்து ஆய்வு கூறும் உண்மை இது!பழந்தமிழர் ஆனாலும்!நாம் நவீன தமிழர்!
உலகை புத்தியால்வெல்லு!புத்திமான் பலவான்!புலம்பெயர்தமிழர் கடமைபெரிது!
உலகெலாம் உணர்!தமிழரைஉயர்த்து! நம்மவர்வாழ்வு நம்மண்ணிலும் சிறக்கட்டும்!
ஒவ்வொருவர்வாழ்வும்! மற்றவர்க்குபாடமே!வாழ்வுமுடியமுன் வரலாறுஎழுதுக!
அவ்வப்போதுநினை ஆண்டவன்திருவடி!ஆணவம்,கன்மம்,மாயை உணர்ந்திடுக!
எவ்வாறெனினும் எம்வாழ்வு எம்கைகளில்! எதிரிகள் எமக்கு எங்கும் உளரே!
ஒவ்வாதமிழர் தமிழர்க்குஎதிரி!அவா,வெகுளி,அழுக்காறு,காமம்,குரோதம் நம்எதிரி!
நல்லையா சண்முகப்பிரபு
திறம்மன்,நோர்வே------- Tel.0047-91784271 --------16-06-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment