WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, July 10, 2012

மே 2009 இல் எங்களுடைய குருதியையும் தசையையும் பங்கு போட்ட அனைவரும் இப்போது எங்களது வளங்களையும், நிலத்தையும் எஞ்சியிருக்கும் வாழ்வையும் தீவிரமாககக் கூறு போடுகிறார்கள். நிலம் என்பது எங்களுடைய தனிப்பட்ட சொத்து அல்ல; அது நமது வாழ்க்கையின அடையாளம்.!!!

புலம்பெயர், தமிழ்நாடு, ஈழத்து உறவுகளின் சக்திகள் ஒன்றாய் திரண்டால் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்-செல்வம் அடைக்கலநாதன். Posted by: on ஜூலை 8, 2012 எமது தமிழ் இனம் தமது பூர்வீக நிலங்களில் தமது வரலாற்றை சிதைக்கின்ற வகையிலேஇனி வரலாறு எழுதுகின்ற போது தமிழன் பூர்வீகமாக வாழ்ந்த வரலாறு இல்லை என்று சொல்லக்கூடிய வகையிலே சதித்திட்டத்தோடு எங்களுடைய தமிழ் பேசும் இனத்தை அழிப்பதற்காண திட்டங்களை தீட்டி அதன் அடிப்படையிலே உருவாக்கப்பட்ட விடையம் தான் இந்த நில அபகரிப்பு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காணி அபகரிப்பு மற்றும் மீனவர்களுக்காண பாஸ் நடைமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த சாத்வீக போராட்டம் நேற்று சனிக்கிழமை காலை மன்னார் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம் பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார் அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் -இன்று வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் எமது மக்கள் அகதிகளாக தமது சொந்த இடங்களில் வாழும் நிலையில் வெறுமையற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்தஅளவிற்கு இந்த அரசு எங்களுடைய இனத்தை ஒரு அடிமை இனமாக பார்க்கின்ற காரணத்தினால் தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மன்னார் மாவட்டத்தை எடுத்துப்பார்த்தேமாக இருந்தால் சன்னார் கிராமத்தில் உள்ள மக்கள் அரசாங்கம் அந்த காணியை காணிக்கச்சேரி வைத்து அந்த மக்களுக்கு கொடுத்த பிறகு கூட அந்த மக்கள் இந்த இடத்தில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அந்த மக்கள் மிகவும் கேவலமாகவும் முகம்களிலே உள்ள மக்கள் போன்றும் வாழ்ந்து வருகின்றனர். யாராக இருந்தாலும் இந்த மக்களுக்கு மலசல கூடம் கட்டிக்கொடுக்க வேண்டும். ஆனால் இன்று அந்த மக்கள் மலசல கூடம் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் அங்குள்ள அரச அதிகாரிகள் அம்மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு கொடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். -எங்களுடைய ஆயர் அவர்கள் சன்னார் மக்களுக்கு சரியான தீர்வு கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட அந்த காரணத்திற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் ஆயருக்கு எதிராக பிழையாக உரை ஆற்றப்பட்டது. இன்று கத்தோலிக்க திருச்சபைக்கு ஆயர் அவர்களின் கண்கானிப்பிலுள்ள பல இடங்கள் இன்று இந்த அரசால் பறிக்கப்பட்டிருக்கின்றது. -தலைமன்னார் பியர் மன்னார் தள்ளாடி அந்தோனியார் கோவில் முள்ளிக்குளம் சிறுத்தோப்பு உள்ளிட்ட பல கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான காணிகளை இந்த அரசு பறித்துள்ளது. அதே போன்று எமது முஸ்ஸிம் சகோதரர்களுடைய பல காணிகளைக்கூட இந்த அரசு பல இடங்களிலே கைப்பற்றியிருக்கின்றது. முஸ்ஸிம் சகோதரர்களும் அதற்கெதிராக குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆகவே மொத்தத்திலேயே சிறுபாண்மை இனம் என்பது இந்த நாட்டிலே வாழக்கூடாது என இந்த அரசாங்கம் திட்டமிட்டு சதி செய்கின்றது. இதனால் தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் எமது மக்களும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதை அடையாளமாக ஒரு எழுச்சியோடு இந்த விடையங்களை எதிர்க்கின்ற போராட்டங்களை செய்து வருகின்றோம். இறுதியாக வடக்கி-கிழக்கு இணைந்த மாபெரும் போராட்டத்தை ஏற்பாடு செய்து நிச்சயமாக அறிவித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் குறித்த போராட்டம் இடம் பெறும்.இந்த அரசிற்கு சரியான பதிலடியை கொடுப்பதாக அமையும். இந்த அரசு நினைக்கக்கூடாது தமிழர்களின் ஒரு பலத்தை அழித்து விட்டால் அடுத்தது அவர்கள் எல்லாம் அடிமைகள் என்று நினைக்கக்கூடாது. நாங்கள் மீண்டெழுவோம் என்பதை இந்த அரசுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த போராட்டங்களினூடாக நாம் இழந்தவற்றை எல்லாம் மீட்டெடுப்போம் என்பதனை இந்த சாத்வீக போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றது. மன்னார் மாவட்டத்தில் பாஸ் நடமுறை அமுலில் இருக்கின்றமையினால் இன்று எமது மீனவர்கள் பலதுயரங்களை சந்திக்கின்றனர். பாஸ் பொற்றுக்கொள்வதற்கு பல தரப்பினரிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.குறித்த பாஸினை பெற்றுக்கொள்ள குறித்த மீனவர்கள் மாதக்கணக்கில் அலை வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பாஸ் இல்லாமல் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தென் பகுதியைச் சேர்ந்த பலர் தங்கி நின்று பாஸ் இல்லாமல் பாதுகாப்புடன் தடை செய்யப்பட்ட அனைத்து வித மீன் பிடித்தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் எங்களுடைய இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் எங்களுடைய இந்த கடலிலே தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.ஆனால் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் இங்கு எந்த வித தடையும் இன்றி தொழிலில் ஈடுபடுகின்றனர். -பாஸினை வைத்து மீனவர்களை துன்புருத்துகின்றார்களோ தவிர இதனால் வேறு எந்த நன்மையும் இல்லை.ஆகவே இந்த பாஸ் நடைமுறையும் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதும் இந்த போராட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த மீணவர்கள் சுதந்திரமாக தமது தொழிலைச் செய்வதற்கான வசதியினையும் உரிமையையும் கொடுக்க வேண்டும் என்பது எமது நோக்கமாகும். இந்த பாஸ் நடைமுறை தற்போது மன்னார் மாவட்டத்தில் மாத்திரமே உள்ளது.ஆகவே பாஸ் நடைமுறை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது போராட்டத்தின் இரண்டாவது நோக்கமாகும். -வவுனியா சிறைச்சாலையிலே பல வருடங்கலாக வாழ்ந்து வரும் அரசியல் கைதிகள் அண்மையில் உண்ணா நோன்பிருந்த போது அந்த உண்ணா நோன்பை முறிக்கின்ற வகையில் செயற்பாடு இடம் பெற்ற போது அங்கு மூன்று சிறைக்காவலர்கள் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை பிடித்து வைத்த குற்றத்திற்காக 33 தமிழ் அரசியல் கைதிகள் உள்ள சிறைக்கூடத்தில் 13 மயக்க குண்டுகள் போடப்பட்டு அவர்களை மயக்கி பின் அவர்களை நையப்புடைத்து ஒரு மணிக்கு அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஒரு மணியில் இருந்து 11 மணிவரை அவர்கள் மீது தாக்குதல் இடம் பெற்றுள்ளது.அங்கு கைதிகளை வைத்தே தாக்கப்பட்டுள்ளனர்.வவுனியாவுக்கும் அனுராதபுரத்திற்கும் பொறுப்பான ஒரு எஸ்.பி தனது சப்பாத்து காலை குறித்த கைதிகளை நக்கச்செல்லுகின்றார். நக்குகின்ற போது கைதிகளின் தலை பின்புரத்தில் அடிக்கின்ற அல்லது உதைகின்ற சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது.கடுமையான தாக்குதல்களின் பின்னர் கைதிகள் இரத்தக்காயங்களுடன் இரவிரவாக மகர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதனை பார்த்த கைதிகள் தெரிவித்துள்ளனர்.நாங்கள் பார்க்கின்ற போது அவர்கள் ஒரே உடுப்புடன் இருக்கின்றார்கள். இதனை நான் மன்னார் ஆயரிடம் தெரிவித்தேன்.ஆயர் அவர்களும் இதற்காண உதவிகளை செய்துள்ளார்.அதனை நாங்கள் கொண்டு சென்று கொடுப்பதற்காண ஏற்பாடுகளை செய்துள்ளோம். சிறையில் உள்ள கைதி ஒருவர் இறந்தமையினை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார் அவர் மாரடைப்பின் காரணமாகவே உயிர் இழந்துள்ளார் என்று. இன்று சிறையில் உள்ள கைதிகள் பல வகையிலும் பாதீக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.உயிரிழந்த அரசியல் கைதியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க படைத்தரப்பு மறுத்து வருகின்றனர். ஆனால் அவருடைய பெற்றோர் தனது மகனின் உடலை வவுனியா கொண்டு வந்து அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனார். குறித்த உடலத்தை மீட்ககொழும்பு உயர் நீதிமன்றத்தை நாடி தீர்வை பெற்றுக்கொள்ளவுள்ளோம் உடலை வவுனியா கொண்டு சென்று அடக்கம் செய்யப்போகின்றோம் என்ற தீர்வை பெற்றுக்கொள்ளவுள்ளோம் -அந்த இளைஞர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன? அவர் கைது செய்யப்பட்ட போது வழக்கு ஒன்றும் போடப்படாமல் இருந்தது. அவர் நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இருந்தார். ஆனால் இப்போது சொல்லுகின்றார்கள் அவர் ஒரு விடுதலைப்புலி இயக்கத்தின் முக்கியமான ஒரு தளபதி. அப்படியானவரது உடலை வவுனியாவிற்கு பாதுகாப்பு கருதி கொண்டு செல்ல முடியாது . ஒரு உடலுக்காக எவ்வளவு பொய் கூறப்படுகின்றது?இப்படி மிக மோசமாக வஞ்சிக்கின்ற எம்மை அடிமைத்தனமாக நடத்துகின்ற சிந்தனை கொண்ட இந்த அரசு இன்னும் எத்தனை கொடுமைகளை செய்யப்போகின்றது என்பதனை நாங்கள் கண்ணூடாக பார்க்கப்போகின்றோம். ஆனால் நாம் இப்படியே இருந்தோம் என்றால் எம்மை கும்பிட வைக்கும் ஒரு இனமாக மாற இந்த அரசாங்கம் கொண்டு வரும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். அப்படிப்பட்ட ஒரு நிலையை நாம் உண்டு பண்ணப்போகின்றோமா?வாய் மூடி இருக்கப்போகின்றோமா? இல்லை இந்த அரசு செய்கின்ற அத்தனை அட்டுளியங்களையும் அத்தனை அநீதிகளையும் பூர்விக நிலங்களையும் எமது உரிமைகளையும் பறிக்கின்ற அந்த நிலையை நாங்கள் தட்டிக்கேட்கின்ற உரித்துள்ளவர்கள் என்பதனை காட்டுகின்ற அந்த நிகழ்வுகளிலே நாங்கள் பல இலட்சக்கணக்கிலே எங்களுடைய மக்கள் அணி திரளுகின்ற போது தான் இந்த அரசிற்கு நாங்கள் சரியான பாடத்தை புகட்ட முடியும். எனவே நாங்கள் போராட்டம் என அறிவித்தால் அது பெரிய அளவிலேயே மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.அப்போது தான் இலங்கை அரசாங்கத்தின் அதிபதியையும் இந்த அரசையும் நாங்கள் அடி பனிண வைக்க முடியும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இதற்கு புலம் பெயர்ந்த எமது உறவுகள் இருக்கின்றது.தமிழ் நாடு இருக்கின்றது.ஆகவே இந்த மூன்று பலமும் ஒன்றாகச் சேர்ந்தால் எமது வாழ்வாதார பிரச்சினை தீர்க்கப்படும்.எமது சொந்த இடங்களில் வாழக்கூடிய அந்தஸ்தை பெற முடியும். இந்த பாஸ் நடமுறை நீக்கப்படுகின்றதற்கான தீர்வு பிறக்கும்.நாங்கள் எங்களுடைய நாட்டிலே சுதந்திரமாக வாழ்வதற்கான நிலை ஏற்படும்.அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.ஆகவே இந்த மூன்று பலமும் ஒன்றாக பிறையோகிக்கப்படுகின்ற போது நாங்கள் சரியான ஒரு தீர்வை எட்டக்கூடிய சக்தியாக மாறுவோம் என செல்வம் அடைக்கலநாதன் தனது உரையில் மேலும் தெரிவித்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மே 2009 இல் எங்களுடைய குருதியையும் தசையையும் பங்கு போட்ட அனைவரும் இப்போது எங்களது வளங்களையும், நிலத்தையும் எஞ்சியிருக்கும் வாழ்வையும் தீவிரமாககக் கூறு போடுகிறார்கள். நிலம் என்பது எங்களுடைய தனிப்பட்ட சொத்து அல்ல; அது நமது வாழ்க்கையின அடையாளம்; நமது அடையாளத்தின் இயற்கை, நமது இயற்கையின் அடையாளம். நமக்கான சிறப்பான உருவகம். இதனை இப்போதைக்கு வளர்த்தைகளாலும் வலியோடும்தான் வலியுறுத்த முடிகிறது என்பதுதான் நமது காலத்தின் அவலம்.

No comments: